விடாமுயற்சி டிரைலரில் இத நோட் பண்ணீங்களா? பிரேக் டவுனில் இது இல்லையே…
Vidaamuyarchi: அஜித் நடிப்பில் பல நாட்களாக எதிர்பார்த்து வந்த விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது ஒரு சூப்பர் தகவலும் வெளியாகி இருக்கிறது.
விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து இருக்கும் விடாமுயற்சி திரைப்படம். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பே நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பல மாதங்கள் அஜித்தும் பைக் டிரிப் சென்று வந்தார்.
அஜர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் பலமுறை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுவே படத்தின் அதீத காலதாமத்திற்கு காரணமானது.
இதுமட்டுமல்லாமல் தற்போது அஜித் குட் பேட் அக்லி படத்தினையும் முடித்து கொடுத்துவிட்டதால் ஜனவரி 10ல் எதாவது ஒரு படம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடாமுயற்சி டீம் தாங்கள் வெளியிடுவதாக முந்திக்கொள்ள விறுவிறுப்பாக வேலைகள் நடந்தது.
காப்பி ரைட்ஸ் பிரச்னை: ரொம்ப ஆர்வத்துடன் பொங்கல் ரேஸில் முன்னணியில் இருக்கும் எனக் கூறப்பட்ட விடாமுயற்சி திடீரென பின் வாங்கியது. இப்படம் ஒரிஜினலாக ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.
அதனால் தங்களுக்கு ரீமேக் உரிமைக்கான தொகை வேண்டும் என பராமவுண்ட் நிறுவனம் நோட்டீஸ் விட்டதை அடுத்தே இந்த பிரச்னை எனக் கூறப்பட்டது. இதை தொடர்ந்து பார்டனர்ஷிப் டீல் போட்டு ஒருவழியாக படத்தின் பிரச்னையை படக்குழு முடித்துள்ளது.
விடாமுயற்சி டிரைலர்: ஒருவழியாக படத்தின் பிரச்னை முடிந்துவிட்டதால் இன்று அதிக ஆரவாரத்துடன் விடாமுயற்சியின் டிரைலர் வெளியிடப்பட்டு இருக்கிறது. காதலில் தொடங்கி அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் டிரைலர் எடிட் செய்யப்பட்டு இருக்கிறது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
என்ன இருக்கு: விடாமுயற்சி திரைப்படம் முழுமையாக பிரேக் டவுன் படத்தினை அப்பட்டமாக காப்பி அடிக்கவில்லையாம். உண்மையில் பிரேக் டவுன் ஒரு மணி நேரம் 33 நிமிடங்கள் மட்டும் தான். ஆனால் விடாமுயற்சி திரைப்படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் இது மொத்தமாகவே தமிழ் ரசிகர்கள் கண்ணோட்டத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய பேட்டியில் கூட மகிழ் திருமேனி ஒரிஜினலில் ரெஜினா கதாபாத்திரமே இல்லை. இதை நாங்களே மொத்தமாக உருவாக்கி சேர்த்து இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
அது மட்டுமில்லாமல் தற்போது டிரைலரில் நீண்ட முடியுடன் அஜித்தின் ஒரு காட்சி இடம்பெற பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கும் போல என யூகங்களும் கிளம்பி இருக்கிறது. மூன்று காலங்களில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ப அஜித் தன்னுடைய உடல் எடையில் மாற்றம் காட்டி நடித்து இருக்கிறாராம்.