Vijay: என்ன ப்ரோ நக்கலா..? பாம்பு போட்டா வாயில நுரை தள்ளிடும்!.. விஜயை மறைமுகமாக சாடிய லியோனி!...

by ramya |
Vijay: என்ன ப்ரோ நக்கலா..? பாம்பு போட்டா வாயில நுரை தள்ளிடும்!.. விஜயை மறைமுகமாக சாடிய லியோனி!...
X

leoni

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருகின்றார். நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட்டிருப்பது பலருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தனது கட்சியை அறிமுகம் செய்த விஜய் அதனை முறையாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து தனது கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்திருந்தார்.

நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டை நடத்தி முடிப்பதற்கு முன்பு வரையில் ஆதரவு தெரிவித்த பலரும் மாநாட்டிற்கு பிறகு அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.. ஏனென்றால் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டி தொகுதியில் நடத்தி முடித்திருந்தார். அதில் அனல் பறக்க பல விஷயங்களை பேசி இருந்தார்.

சில கட்சிகளை மறைமுகமாகவும், சில கட்சிகளை நேரடியாகவும் தாக்கி பேசியிருந்தார். இதனால் பலரும் அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். மாநாட்டிற்கு முன்புவரையில் விஜய் தம்பி என தலையில் தூக்கி வைத்து பேசி வந்த சீமானே மாநாட்டிற்கு பிறகு அவரை கண்டபடி திட்டி பேசிய வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வந்தது.

மேலும் நடிகர் விஜய் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு குடும்ப அரசியல் செய்பவர்கள் தான் தன்னுடைய எதிரி என்றெல்லாம் பேசியிருந்தது திமுகவினரை சற்று கோபப்படுத்தியிருக்கின்றது. இதனால் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திமுகவை சேர்ந்த பலரும் விஜய் திட்டி பேசி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக-வின் முக்கிய பதவி வகிக்கும் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி விஜயை காட்டமாக விமர்சித்து இருக்கின்றார்.




ஆனால் எந்த இடத்திலும் அவரது பெயரை அவர் பயன்படுத்தவில்லை. அந்த மேடைப்பேச்சில் அவர் பேசிய போது 'என்ன ப்ரோ குழந்தை பாம்பை பிடித்து விளையாடுவதெல்லாம் சரி. பாம்பு குழந்தையை ஒரு போடு போட்டா வாயிலிருந்து நுரை தள்ளிவிடும். அது மட்டும் இல்லாமல் குழந்தை பிறந்த உடனே அம்மா எப்படி இருக்க நல்லா இருக்கியா அப்பா யாருன்னு கேட்டுடாது. முதல்ல மெல்ல மெல்ல வளர்ந்து, நடை வண்டி பிடித்து நடந்து, மழலை மொழியில் பேசி அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணா, தம்பி, பெரியம்மா பெரியப்பா என்று கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளருவாங்க.

திடீரென்று எந்த குழந்தையும் பேசிடாது. அப்படி படிப்படியாக வளர்ந்த கட்சி திமுக. கட்சி தொடங்கிய இரண்டு வருஷத்திலேயே ஆட்சி என்பதெல்லாம் உங்களுக்கு நக்கலா தெரியுதா? படிப்படியா வளர்ந்தா தான் அது வளர்ச்சி. திடீரென வளர்ந்தா அது வளர்ச்சி இல்ல. அப்படி வளந்தா ஒருநாள் காணாமல் போயிடுவீங்க. திமுகவை எதிர்த்த பலரும் அப்படித்தான் காணாமல் போயிருக்காங்க.

நான் ஒரு குட்டி கதை சொல்றேன். ஒருத்தன் உடம்பு சரியில்லன்னு டாக்டர்கிட்ட போனானாமா டாக்டரு காலையில மாலையில் என்று சொல்லிட்டு மருந்து மாத்திரை எழுதி கொடுத்து இருக்காங்க. 15 நாள் இத சரியா போட்டாதான் உடம்பு சரியாகும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஆனா அவனோ ஒரே நாள்ல சரியாகணும்னு 15 நாள் கொடுத்த மாத்திரையை மொத்தமா சாப்பிட்டு இருக்கான்.

அதுக்கப்புறம் அய்யய்யோ டாக்டர் வயிறு வலிக்குது அப்படின்னு மறுபடியும் டாக்டர்கிட்ட போயிருக்கான். அப்படித்தான் படிப்படியா சரியானதா அந்த மருந்து வேலை செய்யும். ஒரே நாளில் போட்டுக்கிட்டா இப்படித்தான் புடுங்கிட்டு போயிடும். நினைத்தவுடன் முதல்வராயிட முடியாது மல்லாக்க படுத்துகிட்டு நல்லா யோசிங்க ப்ரோ' என்று மேடையில் காட்டமாக பேசியிருந்தார். இவரது இந்த பேச்சு இணையதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது.

Next Story