ஆர்யா அந்த விஷயத்துல அப்படி ஒரு வெறி புடிச்சவன்... பாலா என்ன இப்படி சொல்லிட்டாரு?

by Sankaran |
aarya, director bala
X

இயக்குனர் பாலாவைப் பொருத்தவரை அவரது படங்கள் எப்பவுமே வேற லெவலில் இருக்கும். அந்தவகையில் அவரது படம் என்றாலே கதைக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பாரே தவிர, மற்றபடி கதாநாயகனுக்காகக் கதையை அட்ஜெஸ்ட் பண்ண மாட்டார்.

இவரது படங்களில் ஹீரோ நடிக்கணும்னாலே பயப்படுவாங்க. அந்த மாதிரி அவர் கதைக்கு ஏற்றவாறு உடல் அமைப்பை மாற்ற வேண்டும். சிரத்தையுடன் சில பயிற்சிகளை டூப் போடாமல் செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதிப்பார்.

அவரது இயக்கத்தில் விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா என ஒரு சில நடிகர்களே தாக்குப்பிடித்துள்ளார்கள். பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் அவர் படத்தில் நடிக்காததற்கு இதுவும் ஒரு காரணம்.

அந்த வகையில் இந்த லிஸ்ட்ல ஆர்யாவைப் பெருமையாகச் சொல்லலாம். நான் கடவுள் படத்தில் ஆர்யாவை நடிக்க வைத்து மாபெரும் வெற்றியைக் கொடுத்தார் இயக்குனர் பாலா. இதுகுறித்து அவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...

ஆர்யாவைப் பொருத்தவரை நான் கடவுள் படத்தில் தலைகீழா நிக்கிற ஷாட் இருக்குல்ல. அந்த யோகா பண்ணனும்னா குறைந்தபட்சம் 6 மாசம் பயிற்சி எடுக்கணும். ஆனா ஆர்யாவுக்கு அப்படி ஒண்ணு எடுக்க போறாங்கன்னு தெரியாது.

naan kadavul

சூட்டிங் ஸ்பாட் போனதுக்கு அப்புறம் தான் சொன்னேன். அதுமட்டும் இல்லாம கால்ல கும்பிடணும். அவன் 6 நாள்ல தலைகீழா நின்னு அதைப் பண்ணிட்டான். அப்படி ஒரு வெறி புடிச்சவன் தான் அவன் என்கிறார் இயக்குனர் பாலா.

2009ல் பாலா இயக்கத்தில் வெளியான படம் நான் கடவுள். ஆர்யா, பூஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன் மிரட்டல் வில்லனாக வருவார். நமக்கு அவரை இப்போதெல்லாம் காமெடி பீஸாகத் தான் தெரிகிறது.

இந்தப் படத்தைப் பார்த்தால் இவரா அப்படி நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கும். இந்தப் படத்துக்காக ஆர்யா தன் உடலை வருத்தி சிரத்தையுடன் அகோரியாக பல பயிற்சிகளைச் செய்துள்ளார். அதைத்தான் இயக்குனர் பாலா மேலே குறிப்பிட்டுள்ளார்.

Next Story