வணங்கான் படத்துல அருண் விஜய் வந்தது எப்படின்னு தெரியுமா? ரெக்கமண்ட் அவரா?
வணங்கான் படம் முதலில் சூர்யாவை வைத்து பாலா இயக்குவதாக இருந்தது. சூர்யாவின் சொந்தத் தயாரிப்பாகவும் படத்தை ஆரம்பத்தில் எடுத்தனர். இதற்காக சில காட்சிகளை எடுத்ததும் இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் சூர்யா இந்தப் படத்துக்காக பணத்தைக் சில கோடிகளில் கொட்டியதையும் பாலாவிடம் திரும்பக் கேட்கவில்லை.
ஏன்னா அவர்தான் சூர்யாவுக்கு நந்தா என்ற மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தவர். அந்த வகையில் அதைப் பொருட்படுத்தாமல் சூர்யா விட்டுவிட்டார். அவருக்குப் பிறகு வணங்கான் படத்தை அருண்விஜயை வைத்து ஆரம்பித்தார் இயக்குனர் பாலா.
இந்தப் படத்தில் சூர்யா நடிக்காமப் போனதுக்குக் காரணம் கிரவுடுதான். கன்னியாகுமரில பப்ளிக் மத்தியில சூர்யா மாதிரி பெரிய நடிகர் நடிப்பது சிரமம். அதனால தான் விலகினார்னு பாலா சொன்னதை யாரும் நம்ப மாட்டார்கள் என்றார் வலைப்பேச்சு அந்தனன்.
மேலும் இந்தப் படத்தில் அருண்விஜய் நடித்ததைத் தொடர்ந்து அஜீத்குமாரும் அவரை வாழ்த்தியுள்ளாராம். படம் வரும் பொங்கல் தினத்தையொட்டி ரிலீஸ் ஆவதால் பல்வேறு ஊடகங்களுக்கு இயக்குனர் பாலா பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் வணங்கான் படத்தில் நடிக்க அருண்விஜயை இயக்குனர் பாலா எப்படி தேர்ந்தெடுத்தாருன்னும் சொல்றாரு. வாங்க பார்க்கலாம்.
அருண் விஜய் என்னோட மைன்ட்ல இல்ல. இயக்குனர் ஏஎல்.விஜய்தான் ஸ்ட்ராங்கா சொன்னாரு. ரொம்ப டெடிக்கேட்டடா ஒர்க் பண்ற ஆர்டிஸ்ட்னு. அப்புறம் நேர்ல பார்த்துப் பேசுனேன். ரொம்ப புடிச்சிப் போச்சி.
அவர் நடந்துகிட்ட விதம் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. சரி. இவர வெச்சே கண்டினியு பண்ணுவோம்னு முடிவு பண்ணிட்டேன் என்கிறார் இயக்குனர் பாலா.
ஏற்கனவே ஏஎல்.விஜயின் இயக்கத்தில் அருண் விஜய் மிஷன் சேப்டர் 1 என்ற படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். லைகா புரொக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.
பாலாவின் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் முதல் படம் வணங்கான். ரோஷினி பிரகாஷ் ஜோடி சேர்ந்துள்ளார். சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஸ்கின், ராதா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.