விஜய் சேதுபதி போனா சியான் விக்ரம்!.. ரூட்டை திருப்பிய 96 பட இயக்குனர்!..

Director Prem: சில இயக்குனர்கள் சில படங்கள் எடுத்தாலே பேசப்படுவார்கள். தியாகராஜன் குமாரராஜா இதுவரை ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். ஆனால், அவர் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுகிறார். அதுபோல்தான் 96 படம் எடுத்த பிரேம் குமார்.
விஜய் சேதுபதி, திரிஷாவை வைத்து 96 படத்தை இயக்கினார். பள்ளியில் தன்னுடன் படிக்கும் மாணவியை காதலிக்கும் ஹீரோ பல வருடங்கள் ஆன பின்னரும் அவரையே நினைத்துகொண்டு திருமணம் செய்யாமல் இருப்பார். ஒருநாள் தனது பள்ளிக் காதலியை சந்திப்பார். அப்ப்போது அவருக்கு திருமணம் ஆகியிருக்கும். அந்த ஒருநாள் அவருடன் நேரம் செலவழிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். அதன்பின் அவர்களுக்குள் என்னவானது என்பதுதான் படத்தின் கதை.

கதை சாதாரணமாக இருந்தாலும் அதை பிரேம் இயக்கியிருந்த விதம் பலருக்கும் தங்களின் பள்ளி கால காதலை நினைவுப்படுத்தியது. அழகிய கவிதை போன்ற காட்சிகளால் 96 ஒரு சூப்பர் ஃபீல் குட் படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. எனவே, இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த படத்திற்கு பின் கார்த்தி - அரவிந்த்சாமியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார் பிரேம். சொந்த ஊரில் சிறு வயதில் தன்னுடன் விளையாடிய ஒரு சிறுவனை பின்னாளில் யாரென்றே தெரியாமல் ஒரு நாள் முக்க அவருடன் கழித்து அந்த அன்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஒருவன் தவிக்கும் கதையை தஞ்சாவூர் பின்னணியில் மிகவும் அழகாக எடுத்திருந்தார் பிரேம்.

கடந்த 10 வருடங்களில் தமிழ் சினிமாவில் வந்த முக்கியமான படம் என தெலுங்கு பட நடிகர் நானியே இப்படத்தை பாராட்டியிருந்தார். அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார் பிரேம். கதையை எழுதி தயாரிப்பாளர் ஐசரி கணேசனிடம் போய் சொன்னார். கதை பிடித்துப்போக உடனே பிரேமுக்கு தங்க சங்கிலியெல்லாம் அணிவித்து பாராட்டினர் ஐசரி கணேஷ்.
ஆனால், இந்த கதையில் நடிக்க முடியாது என விஜய் சேதுபதி மறுத்துவிட்டார். எனவே, டிராகன் பட நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் இந்த கதையை சொன்னார் பிரேம். கதை பிடித்திருந்தாலும் ‘இவ்வவு நல்லவனாக என்னால் நடிக்க முடியாது. என் இமேஜுக்கு இது செட் ஆகாது’ என ஒதுங்கிக்கொண்டார் பிரதீப். எனவே, கடுப்பான பிரேம் அந்த கதையை தூக்கி ஒரமாக வைத்துவிட்டாராம்.
வேறொரு கதையை உருவாக்கி அதை சியான் விக்ரமிடம் சொல்ல அவருக்கு அது பிடித்துப்போக இப்போது அந்த கதையை டெவலப் செய்து வருகிறார் பிரேம். எல்லாம் சரியாக அமைந்தால் பிரேம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என்றே கணிக்கப்படுகிறது.
ஒரு நல்ல கதையை நடிகர்கள் எப்படி மிஸ் பண்ணுகிறார்கள் என்பதற்க்கு இதுவே சாட்சி!..