ஒரே படம் பிச்சுகிட்டு கொட்டும் வாய்ப்பு!.. அமரன் பட இயக்குனருக்கு அடிச்ச ஜாக்பாட்..

by Ramya |
rajkumar periyasamy
X

rajkumar periyasamy

ராஜ்குமார் பெரியசாமி: தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. அதற்கு காரணம் அமரன் திரைப்படம். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ரங்கூன் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய 7 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அமரன் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அமரன் வெற்றி:

நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.


இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கதாபாத்திரத்திலும், சாய்பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். படம் வெளிய ஆவதற்கு முன்னதாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பு அனைத்தையும் அமரன் திரைப்படம் மிகச்சரியாக பூர்த்தி செய்திருந்தது.

கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சக்க போடு போட்டு வந்தது. அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 360 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

உயர்ந்த மார்க்கெட்:

அமரன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் மார்க்கெட் கடகடவென உயர்ந்து இருக்கின்றது. அவரது மார்க்கெட் மட்டும் இல்லாமல் சம்பளமும் தான். அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கின்றார். தனுஷின் 55 வது படமாக இப்படம் உருவாக இருக்கின்றது.

பாலிவுட் என்ட்ரி:

தமிழ் சினிமாவில் தனுஷ் திரைப்படத்தை முடித்த கையோடு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பாலிவுட் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தின் மூலமாக இவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கின்றார். அதாவது பிரபல ஹிந்தி தயாரிப்பாளரான பூஷன் குமார் தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கு ராஜ்குமார் பெரியசாமி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.


அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அமரன் திரைப்படத்தின் வெற்றியால் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு பாலிவுட் வரை மவுசு அதிகரித்திருக்கின்றது. ஏற்கனவே இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்தி சினிமாவுக்கு சென்று கலக்கி வரும் நிலையில் தற்போது மற்றொரு இயக்குனரும் பாலிவுட்டுக்கு செல்வது பெருமகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

Also Read: ஏன் கல்யாணம் பண்ணேன்?..புலம்பும் நயன்! பதிலுக்கு விக்கி என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

Next Story