ஷங்கரயே இம்ப்ரஸ் பண்ண 5 இயக்குனர்கள்!.. லிஸ்ட்ல இவர் கூட இருக்காரு பாருங்களே!..
Director Shankar: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். தற்போது தெலுங்கு சினிமா பக்கம் சென்றிருக்கும் ஷங்கர் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு 500 கோடி செலவு செய்து எடுத்திருக்கின்றார்.
வழக்கமாக ஷங்கர் தன்னுடைய பாணியில் படத்தை மிக பிரம்மாண்ட முறையில் இயக்கியிருக்கின்றார். தமிழில் இல்லாமல் இந்த முறை தெலுங்கில் என்ட்ரி கொடுத்திருக்கும் ஷங்கர் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கின்றது. அந்த வகையில் படத்தின் பாடல், டீசர், ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. காரணம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் கேம் சேஞ்சர் திரைப்படம் மூலமாக ஷங்கர் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
படம் நாளை வெளியாக இருப்பதால் தொடர்ந்து பட குழுவினர் தங்களது புரமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஆந்திராவில் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நள்ளிரவு ஒரு மணி காட்சிகள் அதிகாலை 4 மணி காட்சிகள் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
ஏறத்தாழ ப்ரீ புக்கிங்கில் படத்தின் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. தமிழகத்திலும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்காக புரமோஷன் வேலைகளில் ஷங்கர் படு பிஸியாக இருக்கின்றார். தொடர்ந்து தனியார் youtube சேனல்களுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் பேசிய சங்கர் கடந்த ஆண்டு தன்னை இம்ப்ரஸ் செய்த இயக்குனர்கள் பற்றி பேசி இருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'இந்த ஆண்டு நான் லப்பர் பந்து திரைப்படத்தை மிகவும் விரும்பி பார்த்தேன். அப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சைமித்து மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கின்றார். மேலும் மாரி செல்வராஜ், மகாராஜா திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன், சித்தா படத்தை இயக்கிய அருண்குமார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இவர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்' என்று தன்னை கவர்ந்த 5 தமிழ் இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டு கூறியிருக்கின்றார். இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.