பெருசு டைட்டில், கதை உருவானது எப்படி? இயக்குனர் 'பளிச்' தகவல்

By :  Sankaran
Update:2025-03-14 17:43 IST

இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி வைபவ். இவர் நடித்து இன்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டு இருக்கும் படம் பெருசு. ஒரு சின்ன விஷயத்தை மையமாக வைத்து ரெண்டரை மணி நேரமும் வயிறு குலுங்க சிரிக்க வச்சிருக்காங்க. அதுவும் 'ஏ' சான்றிதழ் பெற்ற படம். எந்தவித விரசமான காட்சிகளும் கிடையாது. ரெட்டை அர்த்த வசனமும் இல்லை. வன்முறைகளும் இல்ல. அப்படின்னா எப்படி இருக்கும்னு பாருங்க.

இதுகுறித்து வைபவ் அண்ணன் வெங்கட்பிரபுவே இந்தப் படத்துல நடிச்சதும் 'டேய்..'னு ஆச்சரியப்பட்டாரு. எல்லாம் பார்க்குற பார்வையில தான் இருக்கு. படத்தை ஆடியன்ஸ் பலரும் 'ஏ' என்கிறதை விட்டுட்டு காமெடி பிலிம் மாதிரி என்ஜாய் பண்றாங்க. பேமிலி, லேடீஸ்னு நிறைய பேரு வராங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு வைபவ் சொல்றார். படம் குறித்து இயக்குனர் இளங்கோ ராம்பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பெருசு டைட்டில் வந்தது எப்படின்னு இயக்குனரிடம் நிருபர் ஒருவர் கேட்கிறார். அதற்கு 'பெருசு டைட்டிலை நானும், என்னோட ரைட்டர் பாலாஜியும் விவாதிக்கும்போது அவரோட ஐடியாவுல வந்தது' என்கிறார் இயக்குனர்.

கதையோட கருவை எப்படி பிடிச்சீங்கன்னு கேட்ட கேள்விக்கு இயக்குனர் இப்படி பதில் சொல்கிறார். 'ஆண்மை என்பதை நாம ஒரு குறியீடா காட்டறோம். அது வந்து அப்படி ஒரு விஷயம் அல்ல. கேலிச்சித்திரமாகத்தான் காட்டுனேன். 'நாங்க ஆம்பளைங்கறதைப் பெருசா பார்க்கறோம்'னு பலரும் கெத்தா சொல்வாங்க. ஆனா  பெருசு, சிறுசுங்கறது மேட்டர் இல்லங்கறதுதான் மேட்டர்' என்கிறார் இயக்குனர் இளங்கோ ராம்.


எந்த இடத்திலும் மக்கள் முகம் சுழிக்கக்கூடாதுன்னு பார்த்துப் பார்த்து ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணினோம். ஒரு இடத்துக்குக் கீழே போனா முகம் சுழிக்கிற மாதிரியும், பார்க்கவே அருவருப்பாவும் இருக்கும். அப்படின்னா எப்படி படத்தை ஹேண்டில் பண்றதுன்னு நாங்க கரெக்டா பிளான் பண்ணிப் பண்ணினோம். அது சக்சஸ் ஆகவே வந்துருக்கு என்கிறார் இயக்குனர்.

படத்துல ரெண்டு அண்ணன், தம்பி தேவைப்பட்டாங்க. கார்த்திக் சுப்புராஜ் தான் வைபவ், சுனிலைப் போடலாம்னு சொன்னாரு என்றும் கூடுதலாக தகவலைத் தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் இளங்கோ ராம். 

Tags:    

Similar News