மெய்யழகனில் இயக்குனர் 'டச்' செய்த இடங்கள்... இதெல்லாம் யாருக்காகத் தெரியுமா?

வழக்கமான சினிமாத்தனமான நாலு பைட், நாலு பாட்டுன்னு இல்லாம ரொம்ப அழகா வந்துருக்குற படம் மெய்யழகன்.

'அத்தான்' என்ற ஒரு சத்தான வார்த்தையைக் கொண்டு படம் முழுவதையும் நகர்த்தியுள்ள இயக்குனர் பிரேம்குமார் உண்மையிலேயே திறமைசாலி தான். இவ்வளவு நேரம் இரண்டு ஆண்கள் மட்டுமே பேசிக்கொண்டே இருக்கிறார்களா என்றால் போரடிக்காதா என்ற கேள்வி எழலாம்.

அதைப் படம் பார்க்கும்போது நாமே உணரலாம். சில இடங்களில் மட்டும் தான் இப்படி போர் அடிக்கிறது. பல இடங்களில் ரசிக்க முடிகிறது. கைதட்டல் வாங்கும் காட்சிகளும் இருக்கு. கதை ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தப் படத்தில் டைரக்டர் என்ன தான் சொல்ல வர்றாரு?

படத்தில் இயக்குனர் நிறைய விஷயங்களைப் பேசியிருக்காரு. அரசியல், தமிழர்களின் வரலாறு, எந்த வரலாறை நாம படிக்கணும்? ஆனா எதைப் படிச்சிக்கிட்டு இருக்கோம்? அது மாறணும்கற விஷயங்களையும் பேசுறாரு. பல நூறாண்டுகளுக்கு முன்னாடி நடந்த கரிகாலச்சோழன், சேரர்களுக்கு நடுவில் நடந்த ஒரு வரலாறு அதை ஒரு கல் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு சீன் எடுத்துருக்காங்க. அதைப் பத்தி பேசுறாரு.


இப்ப உள்ள பசங்களுக்கு அவர் என்ன சொல்ல வர்றாருன்னா இதை எல்லாம் நீங்க தெரிஞ்சிக்கோங்க. மேம்போக்கா இருக்காதீங்கங்கறது தான். படத்துல ஒரு காட்சியில மில்க் பிக்கீஸ் பிஸ்கட் பாக்கெட் காட்டுறாங்க. கதை 96ல நடக்குறதால அந்தக் காலத்துல அந்த பிஸ்கட் பாக்கெட் வெள்ளை ரேப்பர்ல ரெட்ல பிரிண்டிங் போட்டு இருக்கும். அதை சிரத்தை எடுத்து இயக்குனர் எடுத்துருப்பாரு.

அந்தளவு மெனக்கெடல் இருக்கும். அதே போல குரங்கு பெடல்ல சைக்கிள் ஓட்டுற சீன் இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லலாம். இதுல வர்ற நிறைய சம்பவங்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் டச் ஆகி இருக்கும். 96 படத்தின் சாயலும் பல இடங்களில் தெரியுது.

இருந்தாலும் இன்று ரத்தம் தெறிக்கும் பல ஆக்ஷன் படங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு அமைதியான ஆரவாரம் இல்லாத அழகான படம் இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான ஒன்று தான். படத்தில் கார்த்தியும், அரவிந்தசாமியும் அந்தக் கேரக்டர்களாகவே மாறியிருக்காங்க. அதிலும் குறிப்பா கார்;த்தி பின்னிப் பெடல் எடுத்துட்டாருன்னே சொல்லலாம்.

Related Articles
Next Story
Share it