அந்த விஷயத்தில் பாக்கியராஜுக்கு அடுத்து வெற்றிமாறன்தான்!.. என்னப்பா சொல்றீங்க!...

by Murugan |
அந்த விஷயத்தில் பாக்கியராஜுக்கு அடுத்து வெற்றிமாறன்தான்!.. என்னப்பா சொல்றீங்க!...
X

பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவரான வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறினார். முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின் அவர் இயக்கியது எல்லாமே பேசப்பட்ட திரைப்படங்கள்தான். நல்ல நாவல்களை சினிமாவுக்கு பொருந்துவது போல் திரைக்கதை அமைப்பதில் இவர் கில்லாடி.

விசாரணை, அசுரன், விடுதலை ஆகிய படங்கள் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையே. இவர் இயக்கிய ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்கள் தனுஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அதேபோல், தனுஷின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படமும் தேசிய விருதை பெற்றது.


இரண்டு, மூன்று படங்களிலேயே தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியிருக்கிறார் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் நடிக்க மற்ற மொழி நடிகர்களே ஆசைப்படுகிறார்கள். தேவரா படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த ஜூனியர் என்.டி.ஆர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என வெளிப்படையாக சொன்னார்.

சூரி, விஜய் சேதுபதியை வைத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, கடந்த 2 வருடங்களாக விடுதலை 2 படத்தை இயக்கினார் வெற்றிமாறன். சமீபத்தில் வெளியான இப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. கண்டிப்பாக விடுதலை 2 படம் விஜய் சேதுபதிக்கு விருதுகளை பெற்றுத் தரும் என்றே பலரும் சொல்கிறார்கள்.


80களில் இயக்குனராக கலக்கியவர் பாக்கியராஜ். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல இவர் இயக்கி நடித்த எல்லா படங்களுமே சூப்பர் ஹிட்தான். தொடர்ந்து 7 வெற்றி படங்களை கொடுத்தது அவர்தான். இப்போது அவரை போலவே தொடர்ந்து 7 வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.

பொல்லாதவன் முதல் விடுதலை 2 வரை தொடர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியிருக்கிறார். அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை துவங்கிவிருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால் கண்டிப்பாக இந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story