மையல் படத்தின் கதைக்காக 2 வருடம் கடுமையாக உழைத்த பிரபலம்... அட அவரா?
மைனா படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த சேது இன்று வெளியாகும் மையல் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்ரிதி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். ஆனால் முதல் படம் மாதிரியே இல்லை. அற்புதமான நடிப்பு.
இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமிய மண் மணம் கமழ எடுக்கப்பட்டுள்ளது. அதனால் இதைக் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்கின்றனர் படம் பார்த்த ரசிகர்கள். இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குனர் ஏழுமலை ஒரு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
மையல் படத்தின் தயாரிப்பாளர் பக்கம் இருந்து தேனி பக்கம் படப்பிடிப்பு எடுக்கலாம்னு சொன்னாங்க. ஆனா மைனா படம் அங்கே எடுத்ததால அதுமாதிரி வந்துடக்கூடாதுன்னு நினைச்சோம். இதுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். அவங்க சேது சாரோட ஃபேமிலி ப்ரண்டு.
அவருக்காகவே ரெண்டு வருஷமா மெனக்கிட்டு ஜெயமோகன் சார் எடுத்துருக்காரு. அவங்க திண்டுக்கல், நாகர்கோவில் பக்கம் சூட்டிங் பண்ணலாம்னு நினைச்சாங்க. அங்க வின்ட் மில் இருந்ததால நேட்டிவிட்டி மிஸ் ஆனது. வேற எங்க இருக்கும்னு பார்த்தா ஜவ்வாது மலையைப் பார்க்கப் போனோம்.
நடிகர் ரமேஷ் கல்வராயன் மலைப்பக்கத்துல நல்ல லொகேஷன் இருக்கும்னு சொன்னாங்க. அவருதான் பர்மிஷன் எல்லாம் வாங்கித் தந்தாங்க. சில நேரம் அங்கு வெடி வச்சிப் பாறையைத் தகர்ப்பாங்க. அந்த நேரம் ஓடி வந்துருவோம். கல் எல்லாம் சிதறும். அதுக்கு அப்புறம் சூட்டிங் வச்சிக்குவோம் என்கிறார் இயக்குனர் ஏழுமலை.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு குடும்பத்தில் நான்கு சுவருக்குள்ளும் 2 மாடுகளுடனும் வாழ்க்கை நடத்தும் ஒரு ஹீரோயின் முதன் முறையாக மாடசாமி என்கிற ஆணை சந்திக்கிறாள். அப்போது அவளுக்கு என்ன உணர்வு ஏற்படுகிறது என்பதுதான் கதை. அழகியலாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஸ்டில்களைப் பார்த்து விட்டு பருத்திவீரன் மாதிரி இருப்பதாகவும் சிலர் சொல்கின்றனர்