கமலை பீட் பண்ணிய சிம்பு.. தக் லைஃப் விழாவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம்

by ROHINI |
simbu
X

simbu

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் தக் லைஃப். நாயகன் திரைப்படத்திற்கு இப்போதுதான் மணிரத்னத்துடன் மீண்டும் கமல் இந்தப் படத்தின் மூலம் இணைகிறார். அதுவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. நாயகன் திரைப்படம் இன்றுவரை தமிழ் சினிமாவே பேசும் படமாக பார்க்கப்படுகிறது. ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படம்தான் நாயகன்.

அந்த மாதிரி படம் இதுவரை சினிமாவில் வரவில்லை. யாரும் தொட முடியாத ஒரு இடத்தில் அந்தப் படம் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் தக் லைஃப் படமும் அப்படி மாதிரியான கதையாக இருக்குமோ என்று பல பேர் கேட்டு வருகின்றனர். என்ன இருந்தாலும் படம் வெளியான பிறகுதான் எப்படிப்பட்ட கதை என்று தெரியவரும். படத்தில் கமலுக்கு இணையான ஒரு ஸ்பேஸை சிம்புவுக்கு கொடுத்திருக்கிறார் கமல்.

அது டிரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது. சமீபத்தில்தான் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சாய்ராம் கல்லூரியில் நடந்தது. அப்போது தமிழ் சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் ஏகப்பட்ட லெஜெண்ட்கள் அந்த விழாவிற்கு வர சிம்புவுக்கு மட்டுமே உற்சாக வரவேற்பை கொடுப்பதை பார்க்க முடிந்தது. கமல் பேசும் போதும் சரி வரும் போதும் சரி கமலை விட சிம்புக்குத்தான் கரகோஷம், ரசிகர்களின் அலறல் சத்தம் அதிகமாகவே கேட்டது.

அதற்கு காரணம் சாய்ராம் கல்லூரி என்பது முழுக்க முழுக்க இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் நிறைந்த அரங்கம். அதுவும் பொதுவாக சிம்பு ஒரு விழா நடக்கிறது என்றால் தன்னுடைய ரசிகர்களுக்கு என ஒரு குறிப்பிட்ட டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொள்வாராம். அப்படி கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் கமல் அரசியலுக்கும் போய்விட்டார்.

simbu

படத்தின் தயாரிப்பாளரும் கூட. அதனால் அந்த விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதில்தான் கண்ணாக இருப்பார் கமல். அதனால் தன்னுடைய ரசிகர்களுக்கு என தனியாக மெனக்கிட முடியாது. அதனால் அதை பற்றி கமல் கவலைப்படவும் வாய்ப்பில்லை. அதுமட்டுமில்லாமல் கமல் போன்றவர்களின் பேச்சு இப்போதுள்ள ரசிகர்களுக்கு கிரிஞ்சாகவே தான் தெரியும். அதுவே கமல் பேசினால் அது புரியவும் புரியாது. அதனால்தான் சிம்புவின் பெருமை ஓங்கியது என இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.

Next Story