கேம் சேஞ்சர் வசூலுக்கு வந்த சிக்கல்!.. ஷங்கர் செய்த வேலையில் 500 கோடி பட்ஜெட்டுக்கு வேட்டு!..
Game Changer: தமிழில் அதிக பட்ஜெட் படங்களை இயக்கி வருபவர் ஷங்கர். எனவே, இவரின் படங்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உண்டு. இவர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 படம் சரியாக போகவில்லை. எனவே, கேம் சேஞ்சர் படத்தை நம்பி இருக்கிறார்.
இரட்டை வேடத்தில் ராம்சரண்: இந்த படத்தின் வேலை துவங்கப்பட்டு 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பின் ராம் சரண் நடிக்க துவங்கிய படம் இது. தெலுங்கில் அதிக செலவில் படங்களை தயாரிக்கும் தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ராம் சரண் இரட்டை வேடம் எனவும் சொல்லப்படுகிறது. அதோடு, கியாரா அத்வானி ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
அரசியல்வதி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிய வேடங்களில் ராம் சரண் நடித்துள்ளார். ஊழல் இல்லாத நாட்டை பார்க்க ஆசைப்பட்ட தனது தந்தையின் கனவை நிஜமாக்கும் முயற்சியில் ராம் சரண் ஈடுபடுவதுதான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியானது.
500 கோடி பட்ஜெட்: இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். அவருக்கும் ராம் சரணுக்கும் இடையே வரும் மோதல்தான் படத்தில் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 500 கோடி பட்ஜெடில் இப்படம் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பேன் இண்டியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது.
எனவே, ஆயிரம் கோடி வசூல் செய்தால்தான் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு இப்படம் லாபத்தை கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கேம் சேஞ்சர் படம் வெளிநாடுகளில் அதிக வசூலை பெற வாய்ப்பில்லை என்பது தெரியவந்திருக்கிறது. பொதுவாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் தெலுங்கு படங்களுக்கெனெ பெரிய மார்க்கெட் இருக்கிறது.
சென்சார் சர்ட்டிபிகேட்: ஆனால், கேம் சேஞ்சர் படத்தில் இடம் பெற்றிருக்கும் வன்முறை காட்சிகள் காரணமாக சென்சார் போர்டு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. வெளிநாடுகளில் ‘ஏ’ சான்றிதழ் படத்துக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களையே அனுமதிப்பார்கள். எனவே, குழந்தைகளோடு படம் பார்க்க போவோரால் படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு அவர்களால் படம் பார்க்கவும் செல்ல முடியாது என்பதே நிதர்சனம். எனவே, கேம் சேஞ்சர் படத்திற்கு வெளிநாடுகளில் கண்டிப்பாக வசூல் பாதிக்கும் என சொல்கிறார்கள்.
எனவே, படமெடுக்கும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்பதே வெளிநாட்டு ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.