அந்த படமே ஓடிடுச்சு.. அப்ப துருவ நட்சத்திரம் நிச்சயம் ஓடும்.. கான்பிடென்ட்டாக பேசிய GVM..!

by Ramya |
gavutham
X

கௌதம் வாசுதேவ் மேனன்: தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து ஒரு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். கிளாஸான இயக்குனர் என்ற பெயரைப் பெற்ற இவர் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும். சமீப காலமாக பெரியளவு திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும், படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.


தமிழ் சினிமாவில் இவர் இயக்கத்தில் வெளிவந்த காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், வெந்து தணிந்தது காடு என பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியை வைத்து டாம்னிக் என்கின்ற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார்.

இந்த திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகின்றார் கௌதம் மேனன். இந்த திரைப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் இப்படம் குறித்து புரமோஷன் வேலைகளில் தொடர்ந்து கௌதம் மேனன் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கௌதம் மேனன் டாம்னிக் திரைப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

மம்முட்டியை வைத்து படத்தை எடுத்தது புதிய அனுபவமாக இருந்தது என்று கூறியிருந்தார். மேலும் துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து பேசி அவர் தெரிவித்திருந்ததாவது 'துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னேன். ஆனால் அவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

சூர்யா துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க நிச்சயம் யோசித்து இருக்ககூடாது போன்ற திரைப்படங்களில் அவர் என்னை முழுமையாக நம்பினார். ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் அப்படி நம்பவில்லை. இந்த படத்திற்கு தயாரிப்பாளராகவும் நான் இருந்தேன். அப்படி துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தால் என்ன ஆயிருக்கும். சூர்யாவுக்கு பட வாய்ப்புகள் வராமல் போய் இருக்குமா? என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதனை தொடர்ந்து பேசியவர் துருவ நட்சத்திரம் படத்தின் மீது எனக்கு தற்போதும் நம்பிக்கை இருக்கின்றது. படம் கடந்த வாரத்தில் எடுத்தது போல பிரஸ் சப்ஜெக்ட்டாக இருக்கின்றது. நிச்சயம் இந்த திரைப்படம் வெளியாகும். மதகஜராஜா திரைப்படம் எனக்கு மேலும் நம்பிக்கையை கொடுத்து இருக்கின்றது. அந்த திரைப்படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.


இது மேலும் என்னை ஊக்கப்படுத்தி இருக்கின்றது. நிச்சயம் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகி வெற்றி படமாக அமையும் என்று கூறியிருக்கின்றார். துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story