இங்க தியேட்டர் காலி!.. ஆனா அங்க வேறவெல்!.. கோட் பட புது அப்டேட்!...

Goat: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து செப்டம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் கோட். பொதுவாக பேன் இண்டியா அதாவது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் வெளியானால்தான் ஒரு பெரிய பட்ஜெட் படம் கல்லா கட்ட முடியும். பாகுபாலி 2, புஷ்பா, கேஜிஎப் போன்ற படங்களெல்லாம் அப்படித்தான் வசூலை அள்ளியது.

எனவே, பெரிய நடிகர்கள் படமெல்லாம் இப்போது பேன் இண்டியா படமாக மாறிவிட்டது. கோட் அப்படித்தான் உருவானது. 400 கோடியில் உருவான இந்த படம் 1000 கோடி வசூலை அள்ளும் என்றெல்லாம் அடித்துவிட்டார்கள். ஆனால், ஆந்திராவில் மழையால் இப்படம் ஒர்க் அவுட் ஆகவில்லை.

வழக்கமாக விஜயின் படம் கேரளாவில் நல்ல வசூலை பெறும். ஆனால், கோட் படத்திற்கு அங்கேயும் வரவேற்பு இல்லை. ஒருபக்கம், ஹிந்தியில் மல்டிபிளக்ஸ் தவிர சிறிய தியேட்டர்களில் கோட் வெளியானது. ஆனால், இப்படத்தில் சி.எஸ்.கே டீமை வெங்கட்பிரபு தூக்கி பிடித்ததால் வட இந்தியாவில் பலரும் கோட் படத்தை ட்ரோல் செய்தார்கள். எனவே, அங்கும் அப்படம் ஓடவில்லை.

அதேநேரம், சமீபத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கோட் படம் ஹிந்தி மொழியில் வெளியானது. இந்நிலையில், விஜயை மிகவும் ரசித்து பார்க்கிறார்களாம் ஹிந்தி ரசிகர்கள். பல காட்சிகளில் விசில் அடித்து கொண்டாடுகிறார்களாம். இது தயாரிப்பாளர் தரப்புக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதேநேரம், தமிழகத்தில் பல தியேட்டர்களில் கோட் காத்து வாங்குகிறது என்றுதால் சொல்ல வேண்டும். ஆனால், அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் வேறு வழியில்லாமல் படத்தை ஓட்டுகிறார்களாம். சில தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் காட்சியையே ரத்து செய்திருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய நடிகர் என்றாலும் 2 வாரங்கள்தான் வசூல் என்பதை கோட் படமும் நிரூபித்திருக்கிறது. அதேநேரம், ஹிந்தி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கோட் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Admin
Admin  
Related Articles
Next Story
Share it