சிம்புவை தொடர்ந்து கயாடு லோஹரை தட்டித் தூக்கியது யாருன்னு பாருங்க!.. பாத் டப்பில் கன்றாவி கோலம்!..

by SARANYA |
சிம்புவை தொடர்ந்து கயாடு லோஹரை தட்டித் தூக்கியது யாருன்னு பாருங்க!.. பாத் டப்பில் கன்றாவி கோலம்!..
X

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ள 'இம்மார்டல்' திரைப்படத்தின் ஃபrஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகி ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் அமரன், குட் பேட் அக்லி, லக்கி பாஸ்கர் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இதை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கும் இசையமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் முன்னணி இசையமைபாளர்கள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தொடர்ந்து பரபரப்பாக இயங்கி வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கிங்ஸ்டன் திரைப்படம் படுதோல்வியை அடைந்தது. இசையமைப்பாளராக வெற்றி கொடி நாட்டிவரும் ஜி.வி.பிரகாஷ் ஒரு நடிகனாக இன்னும் வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் 12 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் இவர்களுக்கு இடையே தொழில்முறை உறவு மட்டும் நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.


இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள இம்மார்டல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். அதில் ஜி.வி.பிரகாஷும் கயாடு லோஹரும் பாத் டப்பில் எதிரெதிரே மஜா போஸில் உட்கார்ந்திருக்கின்றனர்.

டிராகன் படத்திற்கு பிறகு கயாடு லோஹரின் மார்க்கெட் உயர்ந்துள்ளதால் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பும் பெருகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் 13, காதலிக்க யாருமில்லை, இடிமுழக்கம், அடங்காதே உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடிகனாகவும் இட்லி கடை, வாடி வாசல், 4ஜி ஆகிய படங்களில் இசையமைபாளராகவும் படு பிஸியாக உள்ளார்.

இதயம் முரளி, எஸ்டிஆர் 49 படங்களைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் ஜோடியாகவும் படு தாராளமாக நடிக்க கயாடு லோஹர் தயாராகி விட்டார்.

Next Story