விவாகரத்துக்கு பிறகு சைந்தவியோட எப்படி வேலை பாக்குறீங்க!.. ஜிவி கொடுத்த சூப்பர் பதில்..!
GV Prakash: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஜிவி பிரகாஷ். தனது முதல் படத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். இவரது இசையில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, பரதேசி, அங்காடித் தெரு, தலைவா உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கின்றது.
இசையமைப்பாளராக பிரபலமாக ஜொலித்து வந்த ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை ஏற்பட்டது. இதனால் டார்லிங் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோ அவதாரம் எடுத்தார் ஜிவி பிரகாஷ். ஆனால் அந்த திரைப்படங்கள் எதுவும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை.
தற்போது வரை ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஜிவி பிரகாஷ் முன்னணி நடிகராக வர முடியாமல் தவித்து வருகின்றார். இது ஒரு புறம் இருக்க தொடர்ந்து படங்களுக்கும் இசையமைத்து வருகின்றார். அதிலும் கடந்த வருடம் ஜிவி பிரகாஷுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. இவரது இசையில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
அதனை தொடர்ந்து இந்த பொங்கல் பண்டிகைக்கு இவரது இசையில் வணங்கான் திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. அடுத்ததாக நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கின்றார். இப்படி தொடர்ந்து இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வரும் ஜிவி பிரகாஷ் மற்றொரு பக்கம் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது கிங்ஸ்டன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மெண்டல் மனதில் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அன்வி என்கின்ற ஒரு மகள் இருக்கின்றார். இவர்கள் இருவரும் சினிமாவில் பிரபல ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களின் விவாகரத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ் மலேசியாவில் கான்செட் ஒன்றை நடத்தி இருந்தார்.
அதில் சைந்தவியும் பாடல் பாடியிருந்தார். இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வந்தார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷ் இது தொடர்பாக பேசியிருக்கின்றார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் நீங்களும் சைய்ந்தவியும் விவாகரத்து பெற்று பிரிந்ததற்கு பிறகு நீங்கள் சேர்ந்து வேலை பார்ப்பதை பார்க்கும் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
எப்படி இது சாத்தியம் என்று கேள்வி எழுப்பி வந்தார்கள். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஜிவி பிரகாஷ் 'நாங்கள் ரொம்பவே ப்ரொபஷனலாக இருக்கிறோம். ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதை வைத்திருக்கின்றோம். அந்த மரியாதை காரணமாக இருவரும் சேர்ந்து வேலை பார்க்கிறோம்' என்று கூறியிருந்தார்.