சினிமாவுக்குப் பிறகு நடிக்கக்கூடாதுன்னு சொன்ன அஜித்..?! ஷாலினியைக் கட்டிக்க அவ்ளோ தொகையா கொடுத்தாரு?
அஜித்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அம்சமான ஜோடி, அமர்க்களமான ஜோடி என்றெல்லாம் கொண்டாடினர். அதே நேரம் அஜித் காதலை ஷாலினியின் பெற்றோர் எப்படி ஏற்றனர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். அதை இப்போது பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் ஓப்பனாக சொல்கிறார். வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.
அமர்க்களம் படத்தின் போதுதான் இந்தக் காதல் உண்டானது. திருமணத்துக்குப் பிறகு ஷாலினி படத்தில் நடிக்கவில்லை. நடிக்கக்கூடாது என்று அஜித்குமார் தான் சொன்னாரா அல்லது ஷாலினியே விருப்பப்பட்டுத் தான் சினிமாவில் நடிக்காமல் இருந்தாரா? அந்த முடிவை எடுத்தது யார்னு ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொன்ன பதில் இதுதான்.
எனக்குத் தெரிஞ்சி அஜித் சொல்லி இருக்கலாம். அப்போ நடந்ததுதான். நான் கேள்விப்பட்ட தகவலை பல வருஷம் கழிச்சி சொல்றேன். பெரும்பாலும் உண்மையா இருக்கலாம். அல்லது அந்த நேரத்தில் சொல்லப்பட்ட வதந்தியாகவும் இருக்கலாம். என்னன்னா ஷாலினியின் அப்பா பாபு திருமணத்துக்கு உடன்படவில்லை. அந்த நேரத்தில் ஷாலினியும், ஷாமிலியும் பீக்கில் இருந்தனர்.
பெரிய வருமானம் வந்து கொண்டு இருந்தது. அப்படின்னா இவங்க இன்னும் தொடர்ந்து 10 வருஷம் நடிக்கலாமேன்னு அவங்க அப்பா நினைச்சிக்கிட்டு இருந்தாரு. அந்த நேரத்துல உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அஜித் வந்து கேட்குறாரு. அப்போ நீங்க பெரிய தொகையைக் கொடுங்க. இத்தனை வருஷம் நடிப்பாங்க. இவ்ளோ தொகை வரும்.
அந்தத் தொகையை எங்களுக்குக் கொடுங்கன்னு அவரு கேட்டதாக ஒரு தகவல் இருக்கு. அந்தத் தொகையை அஜித் கொடுத்துட்டுத் தான் கல்யாணமே பண்ணினாரு. அப்படின்னா நடிக்கக்கூடாதுங்கறதுதானே அதுக்குள்ள இருக்குற பொருள். அதனால அஜித்தோட வற்புறுத்தலா இருக்கலாம் என்கிறார் அந்தனன்.