இட்லி கடை ரிலீஸ்க்கு வந்த பிரச்சனை.. ஆள சேக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகுதேப்பா..!

By :  Ramya
Update: 2025-01-25 13:18 GMT

Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஹீரோவாக தொடங்கி தற்போது இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார் நடிகர் தனுஷ். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலேயே ஒரு டஜன் திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு படுபிஸியாக நடித்து வரும் நடிகராக மாறி இருக்கின்றார். இதற்கெல்லாம் காரணம் ராயன் திரைப்படம் தான்.

நடிகர் தனுஷ் தன்னுடைய 50வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கி வருகின்றார். அந்த வகையில் முதலாவதாக ராயன் திரைப்படத்தை முடித்த கையோடு நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்திருக்கின்றார்.


இப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இதற்கு அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து தற்போது இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை தான் முழு மூச்சில் எடுத்து வருகின்றார்.

இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே மிச்சம் இருப்பதாக கூறப்படுகின்றது. அதனையும் தாய்லாந்தில் படமாக நடிகர் தனுஷ் முடிவு செய்து இருக்கின்றார். ஏறத்தாழ அனைத்து காட்சிகளும் முடிவடைந்துள்ள நிலையில் அந்த மீதமுள்ள காட்சிகளை எடுக்க முடியாமல் நடிகர் தனுஷ் தவித்து வருகின்றாராம். அதற்கு காரணம் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தான் என்று கூறப்படுகின்றது.

தாய்லாந்தில் எடுக்கும் காட்சிக்கு படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் தேவை என்பதால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்கின்றது. ஏனென்றால் இப்படத்தில் கமிட்டான அனைத்து நடிகர்களும் கொஞ்சம் பிஸியானவர்கள். நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய் என அனைவருமே பல திரைப்படங்களில் கமிட்மெண்ட்டோடு இருந்து வரும் நிலையில் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தாய்லாந்து அழைத்துச் செல்வது என்பது சற்று சிரமமாக இருக்கின்றது.

மேலும் படத்தை வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் செய்வதற்கு அறிவித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி அந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. ஒருவேளை படத்தின் மீதமுள்ள காட்சிகள் எடுப்பதற்கு தாமதமானால் படம் நிச்சயம் தள்ளிப் போகும் எனவும் அப்படி பார்த்தால் இந்த திரைப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸ் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.


இது ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் குட் பேட் அக்லி திரைப்படம். நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி தான் ரிலீஸாக இருக்கின்றது. குட் பேட் அக்லி மற்றும் இட்லி கடை இந்த இரண்டு திரைப்படத்தையும் தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் ரிலீஸ் செய்கின்றது.

இதனால் நிச்சயம் அந்த நிறுவனம் இரண்டில் ஏதாவது ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கின்றது. அப்படி பார்த்தால் தனுஷ் திரைப்படத்தை காட்டிலும் அஜித் திரைப்படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு வாய்ப்பிருப்பதால் இட்லி கடை திரைப்படம் தள்ளிப்போகும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

Tags:    

Similar News