STR 50 படம் நடந்தா அதுக்கு சிம்பு இல்ல இவர்தான் காரணம்… இயக்குனர் சொன்ன சர்ப்ரைஸ்!

STR 50: சிலம்பரசன் நடிப்பில் உருவாக இருக்கும் 50வது திரைப்படத்தினை தேசிங் பெரியசாமி இயக்க இருக்கும் நிலையில் அவர் படம் தொடங்க காரணம் இவர்தான் என இன்னொரு பிரபலத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிலம்பரசன் நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸாக துவங்கிய மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அதை தொடர்ந்து அவரும் நடிப்பின் மீது ஆர்வம் காட்டியே வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு சிம்பு நடிப்பில் பத்து தல கடைசியாக வெளியானது.
அதை தொடர்ந்து சிம்பு தன்னுடைய 50வது திரைப்படத்தில் இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. அப்படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இருந்தும், அப்படம் துவங்காமலே இருந்தது. பல மாதங்கள் கிடப்பில் இருந்த STR50 தற்போது சிம்பு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருக்கிறார். இதற்காகவே ஆத்மன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறது.
இப்படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட பணிகள் செய்ய இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிங் பெரியசாமி தன்னுடைய பேட்டி ஒன்றில், சிம்புவின் 50வது படம் நடக்க இருப்பதற்கு காரணம் யுவன் ஷங்கர் ராஜாதான். அவரிடம் நான் முதல்முறையாக கதை சொன்ன போது அவர் எதுவும் சொல்லவில்லை. நம்முடைய படம் நடக்கும் என்றார்.
ஒருகட்டத்தில் இந்த படம் கிடப்பில் விழுக இருந்தது. அதை காப்பாற்றி நடக்க வைத்தவர் யுவன்தான். விரைவில் நம் படத்தில் இணையலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். யுவன் - சிம்பு கூட்டணியில் விரைவில் நல்ல செய்தி வரும் என்கின்றனர்.