AI வந்தால் இசை அமைப்பாளர்களுக்கு வேலையே இருக்காதா? அதான் இளையராஜா அப்படி சொன்னாரா?

by Sankaran |   ( Updated:2025-02-17 16:30:39  )
ilaiyaraja AI
X

AI தான் எனக்குப் போட்டி என்கிறார் இளையராஜா. AI ல ஒரு பாட்டைப் பாடினா அதுவே இசை அமைத்துக் கொடுத்துடுதுன்னு சொல்றாங்க. AI வந்துடுச்சுன்னா இசை அமைப்பாளர்களுக்கு வேலை இல்லாமல் போயிடுமா? அவர்களுக்குக் கற்பனைத்திறன் தேவையில்லையா?

எதிர்காலத்தில் AI இசைத்துறையில் என்ன செய்யும்? என பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி யூடியூப் சேனல் ஒன்றில் பிரபல இசை அமைப்பாளர் தாஜ்நூர் என்பவரிடம் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

ஒரு ஜானர் மட்டுமில்ல: இப்போதைக்கு இசைத்துறையை எதுவும் பண்ண முடியாது. அதை நான் முழுமையாக சொல்லவும் முடியலை. இசைத்துறை என்பது வெறும் ஒரு ஜானர் மட்டுமில்ல. ரீரிக்கார்டிங் இருக்கு. 2 மணி நேரம் படம். அதுல பல கற்பனைகளும் பல விஷயங்களும் மாறிக்கிட்டே இருக்கு.

AI டெக்னாலஜி எப்படி இருக்குன்னா ஒரு ப்ளோவுல ஃபுல்லாவே பண்ணிட முடியாது. இன்னும் அது வளரல. அது வந்துடுச்சுன்னா என்னாகும்னு தெரியல. ஓவர் ஆல் கருத்து என்னன்னா இது மிகப்பெரிய கேள்விக்குறிதான். AI மட்டும் எல்லாத்தையும் பண்ணிடாது. அதை சொல்றதுக்கான நாலெட்ஜ் இருக்கணும்.


கம்ப்யூட்டர் மாதிரி: அதைப் பொருத்துத் தான் அதோட அவுட்புட் வரும். இல்லாம சும்மா AI இந்தப் படத்துக்கு மியூசிக் பண்ணுன்னா பண்ணிடாது. அதை எப்படி நாம உபயோகப்படுத்துறோமோ அப்படித்தான் வரும். எப்படி கம்ப்யூட்டர் வந்ததும் வேலைகள் எல்லாம் சுலபம் ஆச்சோ, அந்த மாதிரிதான் வரும்.

இன்புட்: தவிர உங்களோட இன்புட்ஸ் எவ்வளவு கொடுக்குறோம்கறது இருக்கு. அதுக்கு நம்மோட நாலெட்ஜ் தேவை. இதைப் பொருத்துத் தான் AI வேலை செய்யும். சும்மா குழந்தைக்கான பாட்டைக் கொடுன்னா அதுக்கு உள்ள இன்புட்ல இருக்குற பாட்டைத்தான் கொடுக்கும். தவிர வேற நாம எதிர்பார்க்குற அளவு வராது.


மனித உணர்வுகள்: இதுக்கு இன்னும் டெவலப் ஆகணும். அந்த வகையில எவ்வளவுதான் முன்னேற்றம் இருந்தாலும் மனித உணர்வுகள் அதில் இருந்தால்தான் இன்னொரு மனிதனைப் போய்ச் சென்றடையும் என்பதுதான் விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story