நான் இங்க எதுக்கு வந்திருக்கேன்?!.. தேவா பற்றிய கேள்விக்கு கடுப்பான இளையராஜா!..

by Murugan |
ilayaraja
X

Ilayaraja: இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நபராக எப்போதும் இளையராஜா இருக்கிறார். சினிமா இசையை தாண்டி இசை கச்சேரிகளை நடத்துவது, வெளிநாடுகளுக்கு சென்று இசையமைப்பது என பல வேலைகளை செய்து வருகிறார். அவ்வப்போது சில ஆல்பங்களையும் அவர் வெளியிடுவதுண்டு.

இந்நிலையில், இந்தியாவில் எந்த இசைக்கலைஞரும் செய்யாத ஒன்றை இசைஞானி இளையராஜா நிகழ்த்தி காட்டவுள்ளார். அதுதான் சிம்பொனி இசை. இளையராஜா அதை செய்ய வேண்டும் என பல இசைக்கலைஞர்களும் ஆசைப்படுகிறார்கள். பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கூட இந்த கோரிக்கையை இளையராஜாவிடம் வைத்தார்.

எனவே, சில மாதங்களுக்கு முன்பு இந்த வேலையை துவங்கினார் இளையராஜா. அதற்கான நோட்ஸ்களை எழுது முடித்துவிட்ட அவர் வருகிற 8ம் தேதி லண்டலில் உள்ள அப்போலோ ஸ்டேடியத்தில் பல நூறு கலைஞர்கள் வாசிக்க சிம்பொனி இசையை இசைக்கவுள்ளார். இந்த ஸ்டேடியத்தில் பீத்தோவன் சிம்பொனியை இசைத்திருந்தார் என்பது வரலாறு. அந்த ஸ்டேடியத்தில் நமது இளையராஜா இசையமைப்பது நாட்டுக்கே பெருமை சேர்க்கிறது.


ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், சிவகார்த்திகேயன், கமல், சீமான் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், லண்டன் செல்வதற்காக இளையராஜா இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது ‘இந்தியாவில் யாரும் செய்யாத ஒன்றை நான் செய்ய போகிறேன். உங்களை போலவே எனக்கும் மகிழ்ச்சி. Incredible இந்தியா போல நான் Incredible இளையராஜா என சொன்னார். அப்போது ஒரு நிருபர் ‘இசையமைப்பாளர் தேவா தனது பாடல்களுக்கு காப்பி ரைட்ஸ் கேட்பதில்லை என சொல்லியிருக்கிறாரே என கேட்க வந்ததும் இளையராஜா கோபமடைந்தார்.

இங்கு இதற்கு பதில் சொல்லவா நான் வந்திருக்கிறேன். தேவையில்லாத கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். ஒரு நல்ல விஷயத்தை செய்ய போகிறேன். எல்லாம் நன்றாக அமையவேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் எல்லோருக்கும் என வாழ்த்து’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

Next Story