‘கூலி’ படம் எல்சியூவா? மோனிகா பாடலில் இத கவனிச்சீங்களா? பிரபலம் சொன்ன தகவல்

coolie
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் கூலி. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸ் ஆக இருக்கின்றது. ஒரு பேன் இந்தியா திரைப்படம் ஆக பிரம்மாண்டமாக இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்தில் ரஜினியுடன் ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மலையாள நடிகர் சவுபின் ஷாகிர் என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அனைத்து மொழிகளிலும் இருக்கும் முன்னணி நடிகர்கள் என்பதால் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினியின் நடிப்பில் பெரிய வசூலை பெற்ற கடைசி திரைப்படமாக அமைந்தது ஜெயிலர் திரைப்படம். 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது .தமிழ் சினிமாவில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் ஜெயிலர் திரைப்படம் அமைந்தது.
அந்த வகையில் ஜெயிலர் படத்தை கூலி திரைப்படத்தின் வசூல் முந்துமா என்பதுதான் இப்போது அனைவருக்கும் ஆன எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக இந்த படமாவது ஆயிரம் கோடி வசூலை அடிக்குமா என வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். அதற்காகத்தான் ஹிந்தி நடிகர் அமீர் கானை இந்த படத்திற்கு கொண்டு வந்தார்களா என்பது பலரின் சந்தேகமாக இருக்கிறது.
எப்படி இருந்தாலும் படம் பெரிய அளவில் மக்களை ஈர்த்துவிட்டால் ஆயிரம் கோடி என்ன அதற்கும் மேல் வசூலை அடையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்த நிலையில் கூலி திரைப்படம் எல் சி யு வில் அடங்குமா என்பதும் பலரின் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் இதுவரை வந்த லோகேஷின் திரைப்படங்கள் அனைத்துமே எல் சி யுனிவர்சில் தான் வந்திருக்கின்றன.
அப்படி கூலி திரைப்படமும் அமைந்திருக்கிறதா என்பதும் பலரின் கேள்வியாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் ரஜினி படம் கண்டிப்பாக எல் சி யூ வில் வராது, அவருடைய படம் எப்பொழுதுமே அவர் படமாக தான் இருக்க வேண்டும் என ரஜினி விரும்புவார் என்றும் கூறி வந்தனர். ஆனால் இப்போது படத்தின் ஒரு சூப்பர் ஹிட் பாடலான மோனிகா பாடலில் கண்டெய்னர் காட்டப்பட்டு இருப்பதால் விக்ரம் படத்தில் இரண்டு கண்டெய்னர் காணவில்லை என்பது போல முடித்து இருப்பார்கள்.

coolie
ஒருவேளை அதற்கும் இந்த பாடலில் உள்ள கண்டெயினருக்கும் ஏதாவது கனெக்ட் இருக்குமா என்றும் பலர் கேட்டு வருகின்றனர். இந்த கேள்வி கூலி படத்தின் பாடல் ஆசிரியரான விஷ்ணு எடவனிடம் கேட்கப்பட்டது. அதற்கு விஷ்ணு எடவன் ‘இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்றும் எல்.சி.யிவில் இல்லை என்றும் சொல்ல முடியாது இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. படம் வெளியான பிறகு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என சொல்லி முடித்து விட்டார்.