தனுஷுடன் டேட்டிங் செல்லும் தெலுங்கு நடிகை… விரைவில் திருமண அறிவிப்பா?

by Akhilan |
தனுஷுடன் டேட்டிங் செல்லும் தெலுங்கு நடிகை… விரைவில் திருமண அறிவிப்பா?
X

Dhanush: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது முன்னணி தெலுங்கு நடிகை ஒருவருடன் காதலில் சிக்கி இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

துள்ளவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். ஒல்லியாக அவர் தேகம் ரசிகர்களிடம் ஹீரோவுக்கான வித்தியாச அடையாளத்தை கொடுத்தது.

வாய்ப்புகள் குவிய தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்தார். தமிழை தாண்டி இந்தி, ஹாலிவுட் வரை தன்னுடைய நடிப்பால் அசத்தி பல விருதுகளை குவித்தவர். அவருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திடீரென இருவரும் திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து தன்னுடைய பெற்றோருடன் தங்கி கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் விவாகரத்து செய்து அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர்.

இந்நிலையில் தற்போது தனுஷ் தெலுங்கு நடிகை மிருணாள் தாக்கூருடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கிறது. சன் ஆஃப் சர்தார் படத்தின் விழாவிற்கு மும்பை சென்று இருக்கிறார் தனுஷ். அதுபோல தனுஷின் இந்தி படமான தேரே இஷ்க் மெய்ன் படத்தின் நிறைவு விழாவிலும் மிருணாள் கலந்து கொண்டார்.

இருவரும் அந்த விழாவில் கை பிடித்து பேசிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 42 வயதாகும் தனுஷுடன் 33 வயதாகும் மிருணாள் டேட்டிங் செய்வது தற்போது வரை உண்மையாகவே கருதப்படுகிறது. ஆனால் அவர்கள் அதனை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story