சங்கீதா க்ரிஷ் விவாகரத்தா? இன்ஸ்டாவில் திடீரென பெயர் மாற்றம்.. என்ன நடந்தது?

by Rohini |
sangeetha
X

sangeetha

தமிழ் திரை உலகில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. தமிழில் கபடி, டபுள்ஸ், பிதாமகன் போன்ற பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்களை உள்ளடக்கியவர். தமிழை விட தெலுங்கில் தான் இவருக்கு மார்க்கெட் அதிகமாக இருந்தது. தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து இன்றுவரை இருவரும் இணை பிரியாத தம்பதிகளாகத்தான் இருந்து வந்தனர்.

இவர்களுக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சங்கீதாவும் கிரிஷும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சங்கீதா கிரிஷ் என்பதை சங்கீதா ஆக்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதிலிருந்து இருவருக்கும் ஏதோ பிரச்சனை இருப்பதாக வெளியில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல சங்கீதா தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு சங்கீதா பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகள் என மிகவும் தன்னை பிசியாக தான் வைத்து வருகிறார். இப்போதும் ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார் .இந்த நிலையில் சங்கீதாவுக்கும் கிரிஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தன்னுடைய காதல் கணவரை பிரிய போவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. சங்கீதாவை பொருத்தவரைக்கும் பல சர்ச்சைகளிலும் சிக்கியவர். திருமணமாகும் போதே கிரிஷை விட சங்கீதா வயதில் மூத்தவர் என கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதை ஒரு பேட்டியில் அவர் மறுத்திருக்கிறார். தன்னைவிட தன் கணவர் தான் வயதில் மூத்தவர் என்று கூறி இருக்கிறார். அதே பேட்டியில் தமிழை விட தெலுங்கில் தான் எனக்கு உரிய அந்தஸ்து கிடைத்தது என்றும் கூறி சர்ச்சையில் சிக்கினார்.

அப்போதே நெட்டிசன்கள் சங்கீதாவை வறுத்தெடுத்தனர். இந்த நிலையில் இவர்களுடைய இந்த விவாகரத்து செய்தி திரையுலகினருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கிட்டதட்ட 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து இப்போது பிரியப் போகிறோம் என்று சொல்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் இப்படி தொடர்ந்து நீடிக்கும் விவாகரத்து சம்பவங்கள் அவர்களை சார்ந்த ரசிகர்களை பெரிதும் பாதிக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Next Story