ஜெயிலரில் தமன்னா.. கூலியில் பூஜா ஹெக்டே!.. ரஜினி நிலைமை இப்படி ஆகிப்போச்சே!...

Coolie: தமிழ் சினிமாவில் 50 வருடங்களாக நடித்து வருபவர் ரஜினி. துவக்கத்தில் கருப்பு வெள்ளை படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார். அதன்பின் பைரைவி படத்தில் ஆண்ட்டி ஹீரோவாக நடிக்க துவங்கினார். அது அவருக்கு கை கொடுக்கவே தொடர்ந்து அது போன்ற வேடங்களில் நடித்து வந்தார்.
ஆண்ட்டி ஹீரோ: ஒருகட்டத்தில் எல்லா நடிகர்களையும் போலவே ஹீரோவாக நடிக்க துவங்கி கதாநாயகிகளுடன் டூயட் பாடினார். காதல் திரைப்படங்களில் நடித்தாலும் அந்த படங்களில் சண்டை காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஒருகட்டத்தில் ரஜினியின் படங்கள் வசூலை குவிக்க துவங்கியது.

ரஜினி பட சாதனை: எனவே, அவரை திரையுலகம் சூப்பர்ஸ்டார் என அழைக்க துவங்கியது. ரஜினி நடித்தாலே படம் ஹிட். தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் என்கிற நிலை உண்டானது. என்னுடைய படம் யாருக்கும் நஷ்டத்தை கொடுக்கவில்லை என்பதே சினிமாவில் நான் சாதித்த விஷயம் என ரஜினியே ஒரு மேடையில் பேசியிருந்தார்.
ஆனால், பாபா திரைப்படத்தின் தோல்வி அதை மாற்றியது. அந்த படம் நஷ்டம் என்பதால் வினியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தார் ரஜினி. அதன்பின் லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த, வேட்டையன் போன்ற படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை.

ஜெயிலர் பட வெற்றி: நெல்சனின் இயக்கத்தில் நடித்த ஜெயிலர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவாலா பாடல் படத்தின் வெற்றிக்கே காரணமாக அமைந்தது. மேலும், மோகன்லால், சிவ்ராஜ்குமர் போன்ற நடிகர்களும் தேவைப்பட்டார்கள். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறார். மேலும், தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, கன்னடத்திலிருந்து உபேந்திரா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
ரஜினி நடித்தாலே படம் ஹிட் என்கிற நிலை மாறி அவரின் படம் வெற்றி அடைய மற்ற மொழிகளில் இருந்து பெரிய நடிகர்கள் மற்றும் கவர்ச்சி பாடலுக்கு ஒரு நடிகை என நிலமை மாறிவிட்டதையே இது காட்டுகிறது என சமூகவலைத்தளங்களில் பலரும் சொல்ல துவங்கிவிட்டனர்.