டேக் ஆப் ஆகும் ஜெயிலர் 2!.. ரஜினியின் ஃபேவரைட் இடத்தில் ஷூட்டிங் ஸ்டார்ட்!...

Jailer 2: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம்தான் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வினாயகன் என பலரும் நடித்திருந்தனர். அதோடு, கேமியோ வேடத்தில் மோகன்லால், சிவ்ராஜ்குமார் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
அதோடு தமன்னாவும் காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலும் ஜெயிலர் பட விழாவில் ரஜினி பேசியதும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. அதோடு, பக்கா ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்து போய் ஹிட் அடித்தது. குறிப்பாக அனிருத்தின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்த படம் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்க சந்தோஷப்பட்ட கலாநிதி மாறன் ரஜினிக்கு மிகப்பெரிய பரிசு தொகையை கொடுத்ததோடு விலை உயர்ந்த கார் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். மேலும், நெல்சனுக்கும் ஒரு காரை பரிசளித்தார். அதன்பின் ஜெயிலர் 2-வை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே நெல்சன் இந்த படத்திற்கான கதையை எழுதி வந்தார். தற்போது அந்த பணிகள் முடிவடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. வருகிற 8ம் தேதி ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது. ரஜினி சினிமாவில் நடிக்க துவங்கிய ஆரம்ப கால கட்டத்தில் அதிக நேரம் செலவழித்தது பழைய உட்லண்ட் (Old Woodland hotel) என சொல்லப்படும் இடத்தில்தான்.
80களில் சினிமாவில் நடிக்கும்போது பல மாதங்கள் ரஜினி அங்குதான் தங்கியிருந்தார். ஒருகட்டத்தில் அந்த ஹோட்டல் மூடப்பட்டு விட்டு படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடப்பட்டது. ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ரஜினி எப்போது அங்கு போனாலும் ‘இந்த இடத்தில்தான் நான் ஓய்வு எடுப்பேன்.. இங்குதான் படுத்திருப்பேன்’ என மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்வாராம்.
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பும் அங்கு துவங்கவுள்ளது. கண்டிப்பாக ஜெயிலர் 2 படமும் பேன் இண்டியா படமாக உருவாகவுள்ளதால் மற்ற மொழிகளில் இருந்தும் நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இதில், சிவ்ராஜ்குமார் நடிப்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.