Jananayagan: 10 ஃபைட் சீன்கள்!.. பரபர ஆக்ஷன்!.. ரசிகர்களுக்கு விருந்து வைக்கப்போகும் விஜய்...
அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் ஜனநாயகன் படத்தை தனது கடைசி படமாக அறிவித்திருக்கிறார் விஜய். கரூர் சம்பவம் விஜயை கடந்த ஒரு மாத காலமாக முடக்கிப்போட்ட நிலையில் தற்போது மீண்டும் விஜய் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கி இருக்கிறார். இன்று கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஒருபக்கம் ஜனநாயகன் பட வேலைகளும் நடந்து வருகிறது. இந்த திரைப்படம் வருகிற 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எந்த அப்டேட் வரவில்லை.
தெலுங்கில் பாலையா நடித்து சூப்பர் ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஜனநாயகன் படமாக உருவாகி இருக்கிறது. அதேநேரம் தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதையில் சில மாற்றங்களை ஹெச்.வினோத் செய்திருக்கிறார் என சொல்கிறார்கள். குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல பகவந்த் கேசரி எப்படி பக்கா ஆக்சன் மசாலா படமாக உருவாகியிருந்ததோ அதுபோலவே ஜனநாயகன் படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறதாம். அதிலும் இந்த படத்தில் 10 சண்டை காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக இப்படத்தின் சண்டை இயக்குனரிடம் 80 நாட்கள் கால்சீட் வாங்கினாராம் ஹெச்.வினோத். அந்த அளவுக்கு அதிகமான சண்டைக் காட்சிகளுடன் படம் உருவாகியிருக்கிறது என்கிறார்கள். இந்த செய்தியை பார்க்கும்போது நிறைய் ஆக்சன் காட்சிகளுடன் படம் பரபரப்பாக செல்லும் என கணிக்கப்படுகிறது.