என்னுடைய மகன்களை விட்டு கொடுக்க முடியாது… ஜெயம்ரவியின் அடுத்த பிளான் இதான்!..

JayamRavi: ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து விட்டார். ஆனால் ஆர்த்தி மாற்று அறிக்கை வெளியிட விஷயம் விவாகரமாக வெடித்தது. தொடர்ந்து தற்போது குழந்தைகள் குறித்தும் ஜெயம்ரவி சொல்லி இருப்பது வைரலாகி வருகிறது.

சமீப காலமாக தமிழ் பிரபலங்கள் விவாகரத்தை அறிவிப்பது வாடிக்கையாகி இருக்கிறது. ஆனால் அவர்கள் தங்களுடைய பெயர்களை மட்டும் மாட்டிக்கொண்டு ஒரே மாதிரியான அறிக்கையை தான் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார்கள். ஆனால் இதில் ஜெயம் ரவி பிரச்சினை விதிவிலக்காக அமைந்திருக்கிறது.

அவர் ஒரு அறிக்கையை வெளியிட இரண்டு நாட்கள் கழித்து ஆர்த்தி தனக்கும் இந்த விவாகரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய அனுமதி இல்லாமல் இது அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு மதிப்பில்லாமல் சென்று இருப்பதாகவும் காட்டமாகவே ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவருக்கும் தொடர்பு இருப்பதாக பிரச்னை திசை திரும்பியது. இதை அடுத்து சமீபத்தில் நடந்த பிரதர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, எனக்கும் இன்னொரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாக கூறுவது அசிங்கமான செயல்.

விவாகரத்து குறித்த விஷயம் ஆர்த்திக்கு தெரியவில்லை எனக் கூறுவது வித்தியாசமாக இருக்கிறது. என் தரப்பிலிருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை அவருடைய தந்தை இரண்டு முறை பெற்று இருக்கிறார். வீட்டில் சமரச பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நான் விவாகரத்தை அறிவித்தேன் என பேசியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய மகன்கள் ஆரவ் மற்றும் அயானை விட்டுக் கொடுக்க முடியாது. அவர்கள் கஸ்டடியை வாங்க எத்தனை வருடமானாலும் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டே இருப்பேன். என்னுடைய எதிர்காலம் மற்றும் மகிழ்ச்சியே என் மகன்கள் தான். என்னுடைய மூத்த மகன் ஆரம்பித்து படம் தயாரிக்க வேண்டும் என்பது தன்னுடைய கனவு எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

என்னுடைய மனைவி ஆர்த்தி என்னிடம் எந்த சமரச பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. இந்த விவாகரத்து விஷயம் பல மாதங்களாக வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வழக்கின் முதல் விசாரணை வரும் அக்டோபர் மாதம் மெட்ராஸ் குடும்ப நல நீதிமன்றத்தில் நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles
Next Story
Share it