தேவரா பட ரிசல்ட்!.. ஜுனியர் என்.டி.ஆர் கட்டவுட்டை கொளுத்திய ரசிகர்?!.. வைரல் வீடியோ!...

Devara Movie: ஆந்திராவில் உள்ள முக்கிய நடிகர்களில் ஜூனியர் என்.டி.ஆரும் ஒருவர். பழம்பெரும் நடிகர் மற்றும் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் பேரன் இவர். அந்த பின்னணியில்தான் இவர் சினிமாவில் அறிமுகமானார். துவக்கத்தில் பிரபு போல குண்டாக இருந்தார். அதன்பின் உடல் எடையை குறைத்தார்.

நன்றாக நடனம் ஆடுவார். சண்டைக்காட்சிகளில் அதிரடியாக நடிப்பார் என்பதால் இவருக்கும் ரசிகர்கள் உண்டானார்கள். தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு Young Tiger, Man of Masses என்கிற பட்டப்பெயர்கள் ஆந்திராவில் உண்டு. ஆந்திராவில் மசாலா படங்களில் கலக்கி வரும் பாலைய்யாவின் அண்ணன் மகன் இவர்.

சிறுவனாக இருக்கும்போதே சினிமாவில் நடிக்க துவங்கினார். ராஜமவுலி இயக்கிய ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என்கிற படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். ராம் சரணுடன் இணைந்து இவர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றி இவரை பேன் இண்டியா நடிகராக மாற்றியிருக்கிறது.


இந்நிலையில்தான், இவரின் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது. இந்த படத்தை கொரட்டால சிவா இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆந்திராவில் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள். ஆனால், படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. பலருக்கும் இப்படம் பிடிக்கவில்லை.

இந்நிலையில், படம் நன்றாக இல்லாத கோபத்தில் ஒரு ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த ஜுனியர் என்.டி.ஆரின் கட் அவுட்டுக்கு தீ வைத்துவிட்டதாக சொல்லப்பட்டது.. அந்த கட் அவுட் கொளுந்துவிட்டு எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம், கோபத்தில் கொளுத்தவில்லை. ஆர்வமிகுதியில் ஒரு ரசிகர் கட் அவுட்டுக்கு ஆரத்தி காட்டியபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.



Related Articles
Next Story
Share it