2வது நாளுக்கே இப்படி முக்குதே!.. பேர மாத்தியும் பிரயோஜனம் இல்லாம போச்சேப்பா..!
Kadhalikka Neramillai: இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் உருவான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படம் ரவிமோகனின் 33 வது திரைப்படம் ஆகும். ஏ. ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 14-ம் தேதி வெளியானது.
இந்த திரைப்படத்தில் ரவியுடன் இணைந்து நித்யா மேனன், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், யோகி பாபு, மனோ, வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த காலத்து காதலை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் பெரும்பாலான இளைஞர்களை அதாவது 2k கிட்ஸ்களை அதிக அளவில் கவர்ந்திருக்கின்றது. இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் பேக் அடித்த காரணத்தால் வரிசை கட்டி பல படங்கள் ரிலீஸ் ஆனது. கேம் சேஞ்சர், வணங்கான், மதகஜராஜா, நேசிப்பாயா, இந்த வரிசையில் வெளியானது தான் காதலிக்க நேரமில்லை.
இதில் கேம் சேஞ்சர், வணங்கான் , நேசிப்பாயா போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. 12 வருடம் கழித்து வெளியான மதகஜராஜா திரைப்படம் திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்த வரிசையில் காதலிக்க நேரமில்லை திரைப்படமும் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.
படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், பெரிய அளவு வசூல் ரீதியாக சாதனை செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளான நேற்று இந்தியா முழுவதும் 1.65 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கின்றது. ஆக மொத்தம் இரண்டு நாட்கள் சேர்த்து இந்த திரைப்படம் சுமார் 4 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக சாதித்தாலும், வசூல் ரீதியாக சற்று சரிவை சந்தித்து இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் ரவிமோகனின் கதாபாத்திரங்கள் இடையே பல வரவேற்பு பெற்று இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயம் ரவி என்கின்ற பெயரை ரவி மோகன் என மாற்றி இருக்கின்றார்.
கடந்த ஆண்டு தொழில் ரீதியாகவும், சொந்த வாழ்க்கை ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த ரவி மோகன் தனது பெயரை மாற்றிய பிறகு இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த வகையில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.