சொல்றதுக்கு படத்துல பெருசா ஒன்னுமில்ல!.. காதலிக்க நேரமில்லை படத்துக்கு புளூ சட்டை விமர்சனம்..
காதலிக்க நேரமில்லை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், வினய், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கின்றார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. மேலும் படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இந்த காலத்து காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது.
வித்தியாசமான கதைக்களத்தை வைத்து ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் இருவருக்கும் சரி பாதி கதாபாத்திரங்களை கொடுத்து படத்தை இயக்கி இருக்கின்றார் கிருத்திகா. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது ஸ்டைலில் விமர்சனம் கூறும் புளூ சட்டை மாறன் இந்த திரைப்படத்திற்கு விமர்சனம் கூறுகின்றார்.
புளூ சட்டை மாறன்: இது தொடர்பாக அவர் தெரிவித்திருந்ததாவது 'இந்த படத்தின் கதையை பார்த்தீர்கள் என்றால் இரண்டு ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். இதில் நித்யா மேனனின் காதலர் ஒரு மன்னிக்க முடியாத தவறை செய்ய, உடனே அந்த திருமணத்தை நிறுத்தி விடுகின்றார். பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள ஆண் துணை தேவை இல்லை என்று முடிவெடுக்கும் நித்யா மேனன் புது முயற்சியில் இறங்குகின்றார்.
இந்த பக்கம் பார்த்தால் ரவி மோகன் குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது, குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லாமலும் இருந்து வருகின்றார். ஒரு கட்டத்தில் ரவி மோகனும், நித்யா மேனனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு இவர்களின் வாழ்க்கை எப்படி போகின்றது என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
இந்த திரைப்படம் முழுவதும் சிங்கிள் பேரண்ட், பிரேக் அப், லிவிங் டுகெதர் உள்ளிட்டவற்றை குறித்து பேசக்கூடிய ஒரு படம். இந்த விஷயங்கள் தற்போது அடிக்கடி கேள்விப்படுவது தான். இந்த விஷயத்தை எல்லாம் கேள்விப்படாதவர்களுக்கு இந்த கதையை ஏற்றுக் கொள்ள முடியாது. படம் வித்தியாசமான கதையாக இருந்தாலும் கதை, திரைக்கதையாக வித்தியாசம் எதுவும் காட்டப்படவில்லை.
அவர்கள் சௌரியத்திற்கு வளைத்து வளைத்து படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தின் அவுட்லைன் நன்றாக இருந்தாலும் திரைக்கதையாக சுவாரஸ்யம் எதுவும் இல்லாதது போல் இருந்தது. படத்தை நன்றாக இயக்கிய இருக்கிறார்கள். நடிகர்கள் மற்றும் நடிகைகளிடமிருந்து நல்ல வேலை வாங்கி இருக்கிறார் கிருத்திகா. பின்னணி இசை சிறப்பாக இருந்தது. படம் இந்த அளவுக்கு மேக்கிங் ஸ்டைலில் சிறப்பாக இல்லை என்றாலும் படத்தை பார்த்திருக்க முடியாது.
முதல் பாதியை காட்டிலும், இரண்டாவது பாதி மிக சிறப்பாக இருந்தது. அதிலும் இரண்டாவது கதாநாயகி வந்த பிறகு படத்திற்கு ஒரு கிரிப் இருந்தது. ஒரு சிக்கலான கதையை எடுத்த படமாக்கி இருக்கிறார்கள். வித்தியாசமான கதையை எடுத்திருந்தாலும் கலாச்சாரத்தை கையில் எடுக்கும் காவலர்கள் ஜாம்பிஸ் மாதிரி வந்து கடித்து வைத்து விடுவார்கள் என்று யோசிக்காமல் தைரியமாக படத்தை எடுத்து இருக்கின்றார். ஒரு பீல் குட் அனுபவத்தை இந்த திரைப்படம் கொடுக்கின்றது. ஒரு முறை இந்த படத்தை திரையரங்குக்கு சென்று பார்க்கலாம்' என்று கூறி இருக்கின்றார்.