ஆஹா ஓஹோன்னு சொன்னாங்க!.. காதலிக்க நேரமில்லை முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?..

by Ramya |   ( Updated:2025-01-15 05:19:02  )
kadhalikka neramillai
X

Kadhalaikka Neramillai: ரவி மோகனின் 33 ஆவது திரைப்படமாக நேற்று வெளியாகியிருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படத்தை இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. மேலும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ரவி மோகன், நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். மேலும் படத்தில் ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், யோகி பாபு, மனோ, வினோதினி உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் நேற்று வெளியாகியிருந்த நிலையில் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது.


பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்கின்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பல திரைப்படங்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு வரிசை கட்டி களமிறங்கின. அந்த வகையில் இயக்குனர் சங்கரின் கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான் போன்ற திரைப்படங்கள் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

ஜனவரி 12ஆம் தேதி விஷாலின் மதகஜராஜா திரைப்படம் வெளியானது இந்த படம் திரையரங்குகளில் சக்கப்போடு போட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காதலிக்க நேரமில்லை மற்றும் நேசிப்பாயா என்று இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

நேசிப்பாயா மற்றும் காதலிக்க நேரமில்லை இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரு காதல் சப்ஜெக்ட்டை மையமாக வைத்து இயக்கப்பட்டது. இருப்பினும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதனால் படம் தொடர்ந்து நல்ல வசூலை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் படம் முதல் நாளில் 2.5 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.


படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் முதல் நாள் வசூல் குறைவாக இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படம் ஜெயம் ரவியில் இருந்து தனது பெயரை ரவி மோகனாக மாற்றிக் கொண்ட நடிகர் ரவிக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனென்றால் கடந்த தீபாவளி பண்டிகைக்கு ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த பிரதர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் நிச்சயம் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story