Kanguva: ரஜினி, விஜய், அஜீத்தெல்லாம் ஓரமா போங்க!.. கங்குவா படம் எவ்வளவு தியேட்டரில் ரிலீஸ் தெரியுமா?..
Kanguva: சூர்யாவின் அசத்தலான உழைப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் கங்குவா. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வேடத்தில் நடித்தார். ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களுக்கு பின் கங்குவா படத்தில் நடிக்க போனார்.
சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரிக்க அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார். கமர்சியல் படமெடுக்கும் சிவா முதன் முறையாக ஒரு சரித்திர கதையை இயக்கியிருக்கிறார்.
எனவே, திரையிலகிலும் ரசிகர்கள் வட்டாரத்திலும் கங்குவா படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதேநேரம், கடந்த 2 வருடங்களாக கங்குவா படம் பற்றி எந்த முக்கிய செய்தியும் வெளியாகவில்லை. இப்போதுவரை கூட சூர்யா, பாபி தியோல் மற்றும் திஷா பத்தானி ஆகிய 3 பேர் இப்படத்தில் நடிப்பது மட்டுமே ரசிகர்களுக்கு தெரியும்.
மற்ற யாரெல்லாம் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதை இதுவரை படக்குழு அறிவிக்கவே இல்லை. ஆனாலும், சூர்யாவின் தம்பி கார்த்தி இந்த படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதையும் படக்குழு உறுதி செய்யவில்லை. கங்குவா படம் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது.
எனவே சூர்யா மும்பை, ஆந்திரா என பல ஊர்களுக்கும் போய் படத்தை புரமோஷன் செய்து வருகிறார். கங்குவா படம் 2 பாகங்களாக உருவாகியிருக்கிறது. முதல் பாகம்தான் இப்போது வெளியாகவுள்ளது. 300 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். கங்குவா படம் 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என ஞானவேல் ராஜா ஊடகம் ஒன்றில் சொல்லி இருக்கிறார். அதற்கு காரணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரென்ச் என பல மொழிகளிலும், பல நாடுகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் 700 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 900 தியேட்டர்களிலும், கேரளா மற்றும் கர்நாடகா சேர்த்து 1000 தியேட்டர்களிலும், வட இந்தியாவில் 3000 - 3500 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் என உலகம் முழுவதும் சேர்த்து கங்குவா படம் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளது.