ஆளவந்தான் தோல்விப் படம்னு யார் சொன்னா?!. யூடர்ன் போட்ட கலைப்புலி தாணு!...

By :  MURUGAN
Update: 2025-05-08 13:13 GMT

நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் ஆளவந்தான். இந்த படத்தில் கமலுடன் மனிஷா கொய்ராலா, ரவீனா டண்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க பாடகர் சங்கர் மதாதேவன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தை கலைப்புலி தாணு மிகவும் அதிக பட்ஜெட்டில் தயாரித்திருந்தார். 2001ம் வருடம் இப்படம் வெளியானது.

இந்த படம் தொடர்பான போஸ்டர்கள், கமலின் கெட்டப்புகள் எல்லாம் ரசிகர்களிடம் ஹைப் ஏற்றியது. அதோடு, இந்த படத்தில் பல புதிய தொழில்நுட்பங்களையும் இந்த படத்தில் அறிமுகம் செய்திருந்தார். இந்த படத்தின் கதையை கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன்பே ஒரு வார இதழில் தொடர்கதையாக எழுதி வந்தார்.

அந்த கதைக்கு சினிமாவுக்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்தார் கமல். ஒளிப்பதிவு, தொழில்நுட்பம் என எல்லாம் அமைந்தாலும் படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை. எனவே, இப்படம் பெரிய வசூலை பெறவில்லை. இதனால், இப்படத்தை தயாரித்த கலைப்புலி தாணுவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.


 

அப்போது ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த தாணு ‘இந்த படத்திற்கு கமல் எனக்கு அதிக செலவு வைத்தார். சில காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுத்தார். நான் இதுவரை தயாரித்ததிலேயே இதுதான் அதிக செலவு. ஆனால், எனக்கு லாபம் வரவில்லை. ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்’ என பேட்டி கொடுத்தார். அதன்பின் அவர் கமலை வைத்து படமே எடுக்கவில்லை. கமலும் தாணுவுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. கடந்த 24 வருடங்களாக இருவரும் பேசிக்கொள்வதே இல்லை. சில நாட்களுக்கு முன்பு ஆளவந்தான் படத்தில் சில மாற்றங்களை செய்து ரீ-ரிலீஸும் செய்தார் தாணு.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய தாணு ‘ ஆளவந்தான் படத்தை அப்போது கொண்டாடாத மக்கள் இப்போது கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் இப்படம் லாபம். அதேபோல், வெளிநாட்டில் எனக்கு பங்கே 3.5 கோடி வந்தது. வழக்கமாக வெளிநாடுகளில் கமலின் படம் 1.5 கோடி மட்டுமே பங்கு வரும். ஆளவந்தான் செலவு அதிகம். வரவு குறைவு’ என பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News