தக் லைஃப்புக்கு போட்டியாக களம் இறங்கும் காளிவெங்கட் படம்... ஆதரவு சிறப்பா இருக்கே!

By :  SANKARAN
Update: 2025-05-28 14:01 GMT

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி நடிக்கும் தக் லைஃப் படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அந்தப் படத்திற்கு எந்தப் படமும் போட்டி இல்லை என்று தான் பலரும் நினைத்தனர். ஆனால் அதே நாளில் காளிவெங்கட் நடித்த மெட்ராஸ் மேட்னி என்ற சின்ன படமும் ரிலீஸ் ஆகிறது.

பெரிய படம் வந்தாலே மத்த எல்லா படமும் தெறிச்சி ஓடிடும். ஆனா சமீபகாலமாக பெரிய படங்கள் வரும்போது சின்ன படமும் சேர்ந்தே ரிலீஸ் ஆகுது. ரெட்ரோ படம் வரும்போது டூரிஸ்ட் ஃபேமிலி வந்து மாஸான வரவேற்பைப் பெற்றது. யாருமே எதிர்பாராத வகையில் வசூலையும் அள்ளியது.

அந்த மாதிரி தான் மெட்ராஸ் மேட்னி படமும் வருது. இதுல காளி வெங்கட்தான் ஹீரோ. இந்த மாதிரி சின்ன படங்கள் தயாரிக்கும்போது அதை வாங்கறதுக்கு ஆளே வரமாட்டாங்க.

அதைக் கொண்டு போய் யாருக்கிட்ட கொடுத்தாலும் ரிலீஸ் பண்ணவும் ஒத்துக்க மாட்டாங்க. ஆனா இந்தப் படத்தோட தகவல்களைக் கேள்விப்பட்டதும் பல முன்னணி நிறுவனங்கள் தாம் வாங்கி ரிலீஸ் பண்றோம்னு தயாரா வந்துருக்காங்களாம். அது நல்ல படமான்னு ரசிகர்கள்தான் சொல்லணும்.

இதுல முக்கியமானவர் ஒலிம்பியா பிலிம்ஸ் அம்பேத்குமார் வந்தவாசி எம்எல்ஏ இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு நம்ம வாங்கி ரிலீஸ் பண்ணிடலாம்னு நினைச்சாராம். சரின்னு அடுத்த கட்டத்துக்கு நகரலாம்னு வந்தா இந்த கேப்ல எஸ்.ஆர்.பிரபு புகுந்து அவரு பேனர்ல இந்தப் படத்தை ரிலீஸ் பணணப் போறாராம்.


படத்தின் தலையெழுத்து எப்படின்னு தெரியல. ஆனா இந்த மாதிரி சின்னப் படங்களுக்கு ஆதரவு வருவது நல்ல விஷயம் தான். ஒரு காலத்துல பெரிய படங்களைப் பார்த்து சின்ன படங்கள் பயந்துகிட்டு இருந்தாங்க. இப்போ சின்னப் படங்களைப் பார்த்து பெரிய படங்கள் பயப்படுற காலம் வந்துடுச்சி என்று தான் பார்க்கவேண்டியுள்ளது. 

Tags:    

Similar News