எனக்கே நடிப்பு சொல்லித் தர்றீயா? யாருக்கிட்ட..? இயக்குனரை லெப்ட் ரைட் வாங்கிய கமல்
கமல் தமிழ்த்திரை உலகின் பல விஷயங்களை கரைத்துக் குடித்தவர். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர் ஒரு சகலகலாவல்லவர். அதனால் தான் 80களிலேயே இவர் நடித்த படத்திற்கு ஏவிஎம் நிறுவனம் சகலகலாவல்லவன் என்று பெயர் வைத்தது.
ஜீனியஸ்: சிவாஜிக்கு அடுத்தபடியாக யாரைச் சொல்ல வேண்டும் என்றால் அது கமல்தான். படத்திற்குப் படம் நடிப்பில் வித்தியாசத்தைக் காட்டுவார் கமல். அந்தவகையில், கமலின் நடிப்பை பாராட்டாத ரசிகர்களே இருக்க முடியாது. சினிமாவில் இவர் ஒரு ஜீனியஸ்.
தன்னோட படங்களில் தனக்கு மட்டும் ஸ்கோப் கொடுக்காமல் உடன் நடிப்பவர்களுக்கும் தாராளமாகக் கொடுப்பார். அவர்களும் தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று நினைப்பார்.
கமல் தலையீடு: இவரது படங்களில் திறமையான நடிகர்கள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து நடிக்க வைப்பார். அதன்படி கமல் நடித்த படங்களில் நாசர் தவறாமல் இடம்பிடித்து வந்ததை நாம் உணர முடியும்.
இவரது படத்தில் இயக்குனர்களிடம் இவரது தலையீடு இருக்கும் என்று சொல்வதுண்டு. அதனால் சில படங்கள் பிளாப் ஆனதும் உண்டு என்பார்கள். ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது.
ஆனால் இப்போது இயக்குனர் ஒருவரை இவர் காட்டமாக கோபித்துக் கொண்ட விஷயம் ஒன்று வெளியே வந்துள்ளது. என்னன்னு பார்க்கலாமா...
கமல் கோபம்: வேட்டையாடு விளையாடு படத்தின் படப்பிடிப்பின்போது, ஒரு காட்சியை கமலிடம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விளக்கியுள்ளார். அப்போது உடல் அசைவுகளுடன் சொல்லி விளக்கம் கொடுத்தாராம். இது கமலுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது கோபத்தை வேறு யாரிடமோ, அவன் யாருங்க எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கன்னு கேட்டுள்ளார். இது கௌதம் மேனன் காதுகளில் விழ, அதில் இருந்து கமலிடம் காட்சியை விளக்குவதோடு நிறுத்திக் கொண்டாராம்.
வேட்டையாடு விளையாடு: 2006ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான கமல் படம் வேட்டையாடு விளையாடு. மாணிக்கம் நாராயணன் தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக அசத்தலாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ஜோதிகா உள்பட பலரும் நடித்துள்ளனர். படம் விறுவிறுப்பான கமர்ஷியல் ஆக்ஷன் படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.