கமலிடம் கோபிநாத் கேட்ட கேள்வி: AI பற்றி என்ன சொல்றீங்க? மனுஷன் பொளந்து கட்டிட்டாரே!
மணிரத்னம், கமல், சிம்பு காம்போவில் விரைவில் வர உள்ள படம் தக் லைஃப். இதனையொட்டி பல்வேறு சேனல்களில் கமல் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் பிரபல சினிமா விமர்சகர் கோபிநாத், கமல் இருவரும் உரையாடும் நிகழ்ச்சி ஒன்று வெளியானது. இதில் கமலிடம் ஏஐ குறித்து கோபிநாத் கேள்வி எழுப்புகிறார். அதற்கு கமல் என்ன சொல்கிறார்னு பாருங்க.
ஒரு அம்மாவை யாரோ பேட்டி எடுக்கிறாங்க. ஏஐ தான் என்றாலும் அதன் சாராம்சத்தைப் பற்றிச் நான் சொல்லல. பாடம் தான் என்றாலும் கூட நான் மனப்பாடம் பண்ணல. ஏஐ பற்றி இசைஞானியின் கருத்து என்னன்னு கேட்குறாங்க. உங்களுக்கு எப்படி அதெல்லாம் தெரியும்னு கேட்குறாங்க. சொன்னாங்க. பேப்பர்ல படிக்கிறதுதான்.
எனக்கு எங்க அம்மா இறந்ததே அப்படித்தான் தெரியும். சொன்னதை வச்சித்தான் தெரியும். நானே ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ்தான். நாம பண்ணின அந்த இன்டலிஜென்ஸ் நம்மளை விட ஆர்ட்டிஃபீஷியலா இருக்கும். நாம தான் அதுக்குக் கத்துக் கொடுக்கணும்னாரு.
எதுவுமே இல்ல. இதைச் சொன்னா அவங்களுக்குப் புரியும். கோடு எழுதுறாங்க. அந்தக் கோடு எழுதுறவங்களுக்குப் புரியும். அதாவது இதெல்லாம் வரக்கூடாது. இந்த பிரிண்டிங் மெஷின்லாம் வரக்கூடாது. கையெழுத்து என்னாகுறது? காரெல்லாம் வரக்கூடாது. மாட்டுவண்டி என்னாகுறது? அப்படின்னு கேட்குறவங்க மாட்டுக்கு சுதந்திரம் கிடைக்குதுங்கறதை யாருமே யோசிக்கிறது இல்ல.
என்னுடைய நண்பர்கள் நிறைய பேரு இயற்கை விவசாயத்துல இருக்காங்க. விவசாயமே இயற்கை இல்லையே. இது எனது எண்ணம். ஆனா நாம வாழும் காலத்துல வாழணும்னா விவசாயம் பண்ணித்தானே ஆகணும். காக்கா வந்து எச்சம் போடும். அதுல விதை விழுந்து காடு வளரும். அப்படின்னு காக்கைக்காகவும், பறவைக்காகவும் காத்துக்கிட்டு இருக்க முடியாது. அதுதான் இயற்கை விவசாயம்.
அதுவாகவே காடாக வருவதுதான் இயற்கை விவசாயம். அதைத்தான் நம்மில் சில பேரு கடவுள்னு சொல்றாங்க. சில பேர் இயற்கைன்னு சொல்றாங்க. அதுல ஊடுருவும் ஆள்தான் மனிதன். அவன் வளரலன்னா விஞ்ஞானம் தாண்டும். வளர்ந்துட்டான்னா எப்படி தாண்டும்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கமல் அமெரிக்காவுக்கு சென்று 6 மாதகாலமாக AI பற்றி படித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.