எல்லா பக்கமும் இறங்கி அடிக்கிறவரு தான் கார்த்தி... அவரு சொன்னதுல என்ன தப்பு?

சூர்யா கூட அவரு மாதிரி இயல்பா நடிக்கலயாமே..!

By :  sankaran
Update: 2024-09-29 07:12 GMT

மெய்யழகன் பட விழாவில் கார்த்தி நான் என்ன நெப்போகிட்டா? அப்பா வந்து சினிமாவுல இருந்தாரு. அதன்மூலமா ஒரு வாய்ப்பு கிடைச்சதை வேணா ஒத்துக்கலாம். ஆனா வாய்ப்பு கிடைச்சாலும் அதுல ப்ரூவ் பண்ணாம நாம அதுல நிலைச்சி நிக்க முடியாதுங்கற மாதிரி சொல்லியிருக்காரு. எதுக்காக திடீர்னு அப்படி சொன்னாருன்னு ஆங்கர் பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தனனிடம் கேட்க அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

நீண்ட காலமாவே இந்த விவாதம் போய்க்கிட்டு இருக்கு. வாரிசு நடிகர்கள் வரும்போது அவங்களுக்கு எல்லாமே ஈசியா கிடைச்சிடுதுங்கற விமர்சனம் வந்துக்கிட்டே இருக்கு. ஒருவேளை அவரை யாராவது அப்படி விமர்சனம் பண்ணினாங்களான்னு தெரியல.

கார்த்தி எல்லாம் அதுக்குள்ள வரவே மாட்டாரு. ஏன்னா அவ்வளவு அருமையா பர்பார்ம் பண்ணக்கூடிய நடிகர். பருத்தி வீரன்ல இருந்து நாம தொடர்ந்து அவரைப் பார்த்துக்கிட்டே இருக்கோம். கைதி மாதிரியும் பண்றாரு. இந்தப் பக்கம் தோழான்னு வேற வேற ஜானரில் படங்கள் பண்றாரு. எல்லா ஜானவரிலும் இறங்கி அடிக்கிறாரு.

மெய்யழகன் படத்தை எல்லாம் அவரு தான் தூக்கி சுமந்துருக்காரு. அரவிந்தசாமிக்கு என்ன தான் இமேஜ் இருந்தாலும் கூட கார்த்தியோட நடிப்பு தனியா நிக்குது. அதனால அவரைக் காயப்படுத்துறதுக்காக அப்படி சொல்லிருக்கலாம். யாராவது ஒருத்தர் விமர்சனம் பண்ணிருக்கலாம். அவரு சொல்றது நூத்துக்கு நூறு சரி. நான் நெப்போகிட் இல்லன்னு சொன்னாரு இல்லையா அது உண்மை தான்...


தமிழ்சினிமாவுல பிரபலமான நடிகர் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் நடிக்க வந்துருக்காங்க. அவங்களால ஜெயிக்க முடியல. விக்ரம் பிரபு சிவாஜியோட பேரன். சிவாஜி தான் தமிழ்சினிமாவோட அடையாளமா இருக்காரு. ஆனா அவரோட பேரனுக்கு இங்கே ஒண்ணும் நடக்கல பாருங்க.

அப்போ குடும்பத்தை வச்சோ, தாத்தாவோட புகழை வச்சோ எல்லாம் வாழ்ந்துட முடியாது. உங்களுக்குன்னு தனிப்பட்ட திறமை வேணும். அதை வந்து கார்த்தி ரொம்ப அழகா வளர்த்துருக்காரு. அவங்க அண்ணனை விட கார்த்தியை ரொம்ப ரசிப்பேன். சூர்யாகிட்ட கூட பல இடங்களில் செயற்கைத்தனம் தெரியுது.

பல படங்களில் நாம சொல்லியிருக்கோம். மிகைப்படுத்தப்பட்ட நடிப்புன்னு. ஆனா கார்த்தி படங்கள்ல எங்கேயுமே துருத்திக்கிட்டுத் திரிய மாட்டாரு. அந்தக் கேரக்டராவே மாறிடுவாரு. அளவான நடிப்பா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News