எல்லாம் போச்சே!.. கங்குவா ரிசல்ட்டால் அப்செட்டில் அந்த இயக்குனர்!.. அடப்பாவமே!...

By :  Murugan
Update: 2024-12-11 15:00 GMT

Actor Suriya: சினிமாவில் சின்ன நடிகர், பெரிய நடிகர் என யாராக இருந்தாலும் சரி வியாபாரத்தை வைத்தே எல்லாம் கணிக்கப்படும். ரஜினிக்கு தொடர்ச்சியாக படங்கள் பெரிய வெற்றி பெறாமல் போனதால் அவரின் சம்பளத்தில் 20 கோடியை குறைத்து விட்டு கொடுத்தார்கள். அவரும் பெற்றுக்கொண்டு நடித்தார்.

அதேபோல், அதே நடிகர் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டால் கேட்டதை விட அதிக சம்பளம் கொடுக்க தயாராக இருப்பார்கள். அதுதான் சினிமா. அதேபோல், முந்தைய படத்தின் ரிசல்ட்டை வைத்தே இங்கே ஒரு ஹீரோவின் படம் கணிக்கப்படும். முந்தைய படம் சூப்பர் ஹிட் என்றால் இந்த படமும் வியாபாரம் ஆகும் என கணக்கு போடுவார்கள்.

அதுவே தோல்விப்படம் எனில் சம்பளத்தை குறைத்து பேசுவார்கள். அதனால்தான், தங்களின் ஒவ்வொரு படமும் ஹிட் அடிக்க வேண்டும் என நடிகர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால், எல்லாருக்கும் அது நடக்காது. சூர்யாவுக்கு ஓடிடியில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகியவை ஹிட் படங்கள் என்றாலும் சமீபத்தில் வெளியான கங்குவா படம் ஹிட் அடிக்கவில்லை.

suriya44

இப்படத்தின் புரமோஷனில் அதிக பில்டப் கொடுத்தார்கள். அதுவே, படம் வெளியான பின் ட்ரோலுக்கும் பயன்பட்டது. படத்தை பார்ப்பவர்கள் வாயை பிளப்பார்கள் என சொன்னார் சூர்யா. இதற்கு முன் அவர் இப்படி சொன்னது இல்லை. கங்குவா மீதிருந்த நம்பிக்கையில் அப்படி சொன்னார்.

ஆனால், ரிசல்ட் அவரை ஏமாற்றிவிட்டது. கண்டிப்பாக கங்குவா படத்தின் தோல்வி இப்போது சூர்யா நடித்து வரும் படத்தின் வியாபாரத்தையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கங்குவா படம் முடிந்ததும் கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார் சூர்யா. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது.

விரைவில் அப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்பாராஜ் தயாரித்தும் இருக்கிறார். கங்குவா படம் தோல்வி என்பதால் அது நமது படத்தையும் பாதிக்கும் என்கிற கலக்கத்தில் இருக்கிறாராம் கார்த்திக் சுப்பாராஜ்.

Tags:    

Similar News