எது ஆணவம்?!.. ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது!.. விஜயை விளாசிய கரு.பழனியப்பன்!..
Actor vijay: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் விஜய். 200 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நடிகர் இவர். இவரின் திரைப்படங்கள் 500 கோடிக்கும் மேல் வசூலை அள்ளுகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக தனது மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகளிடம் விவாதித்து வந்தார். அவரின் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து மக்கள் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வந்தனர். விஜயை டார்கெட் செய்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது, அவரின் 'தலைவா' படத்தை வெளியிட விடாமல் 2 நாட்கள் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது, அவரின் சர்கார் படம் ஓடும் தியேட்டர்களில் பேனர்களை கிழித்து எறிந்தது போன்றவையே விஜய் அரசியலுக்கு வர காரணமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய விஜய் அந்த கட்சியின் மாநாட்டையும் விக்கிரவாண்டியில் நடத்தினார். அந்த மாநாட்டில் விஜய் ரசிகர்கள் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார் விஜய். குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
‘அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?’ என கேட்டார். மேலும், சமூகநீதி என பொய் சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றும் உங்களுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும், ஆணவத்தோடு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிற உங்கள் கணக்கு நடக்காது’ என்றும் பேசினார்.
இதையடுத்து திமுகவை சேர்ந்தவர்கள் விஜயை கடுமையாக விமர்சித்தார்கள். கடும் மழையால் விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகள் பாதிக்கப்பட்ட போதும் விஜய் நேரில் சென்று மக்களை சந்திக்காமல் அவரின் பனையூர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை வர சொல்லி நிவாரண உதவிகள் செய்ததும் விமர்சினத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், விக்கிரவாண்டியில் விஜய் பேசியது பற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் கரு.பழனியப்பன் ‘200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?.. கட்சி துவங்கிய உடனே ஒருவர் ஆட்சிக்கு வந்துவிடுவேன் என சொல்வதுதான் ஆணவப்பேச்சு. நம்பிக்கைக்கும், அதீத நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது’ என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.