இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வேண்டியது கேப்டன் மைத்துனரா? புது தகவலா இருக்கே?
vijayakanth
இயக்குனர் அன்பு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் படைத்தலைவன். முதன்முதலில் சகாப்தம் என்ற திரைப்படத்தில் தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் விஜயகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதன் பிறகு மதுரை வீரன் என்ற திரைப்படத்திலும் நடித்தார். பின்னர் விஜயகாந்துடன் தமிழன் என்ற சொல் என்ற படத்தில் நடித்து வந்தார்.
ஆனால் விஜயகாந்த் மறைவால் இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு தான் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வந்தார் சண்முக பாண்டியன். இந்த படத்தை அன்பு இயக்க இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு விஜயகாந்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலகை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படத்தைப் பற்றியும் படத்தின் நடித்த சண்முக பாண்டியன் பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தனர். குறிப்பாக விஜயகாந்தை பற்றி அவரவர் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்தனர். இந்த நிலையில் இயக்குனர் கஸ்தூரிராஜாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார் .
அவரும் இந்த விழாவிற்கு வந்து பேசினார். அவர் பேசும் பொழுது இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு புது தகவலை பகிர்ந்தார். கஸ்தூரிராஜா முதன்முதலில் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தை தான் இயக்கினார். அதுதான் அவருடைய முதல் திரைப்படம். அந்தப் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ராஜ்கிரணை வைத்து எடுத்த அந்த படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார்.
en rasavin manasile
இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் என இந்த விழா மேடையில் கஸ்தூரிராஜா கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இது சுதீஷுக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவருக்கே இந்த விஷயம் தெரியாதாம். அவரைப் பார்த்து இந்த தகவலை பகிர்ந்த பொழுது உங்களுக்கே தெரியாதா? என கஸ்தூரிராஜா சிரித்துக்கொண்டே கேட்டார். ஆனால் அவர் நடிக்காமல் போய்விட்டது. அதன் பிறகு தான் ராஜ்கிரண் இந்த படத்தில் நடித்தார் என கஸ்தூரிராஜா கூறினார்.