காயுடுக்கே டஃப் கொடுத்த நடிகை... டிராகன் படத்தில் நடந்த மாற்றம்... தப்பிச்சிட்டோம்...

Dragon: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த ஆச்சரிய விஷயம் ஒன்றை அவரே சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
லவ் டுடே திரைப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன். பெரிசா என்ன இருந்துடப்போகுது என பலரும் கணித்திருக்க முதல் ஷோவில் இருந்தே படம் பெரிய அளவில் வரவேற்பை குவித்தது.
ஓ மை கடவுளே என்னும் வெற்றி படத்தினை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கமும் ரசிகர்களிடம் தற்போது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இவர் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் சிலம்பரசன் படத்துக்கு தற்போது செம எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.
டிராகன் டிரெய்லர் வெளியான போது என்ன டான் படமா என எல்லாரும் கலாய்த்து இருந்தனர். ஆனால் அப்போதே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இது வெறும் 10 சதவீதம் மட்டுமே. மீதி படம் பாருங்கள் என விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துக்கொண்டே வந்தார்.
அந்த வகையில் எப்போதும் போல கிளைமேக்ஸில் ஈயம் பூசாமல் நிதர்சனத்தினை சொல்லி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி இருக்கிறது டிராகன் திரைப்படம். இதனால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து 100 கோடியை தாண்டி சென்று வருகிறது.
இந்நிலையில் டிராகன் படத்தில் ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் காயுடு லோகர் நடித்திருந்தனர். ஆனால் அனுபமா நடித்த கீர்த்தி ரோலில் தான் காயுடு நடிக்க வந்தாராம். ஆனால் அஸ்வத்திற்கு அந்த கேரக்டரில் அனுபமாவை நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம்.
பின்னர் அனுபமாவிடம் பேசி அவரை ஒப்புக்கொள்ள வைத்து காயுடுக்கு பல்லவி வேடத்தினை கொடுத்திருந்ததாக பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அந்த பல்லவி வேடத்தால் தற்போது காயுடு கோலிவுட்டில் பெரிய வரவேற்பு பெற்று வாய்ப்புகளை குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.