{"vars":{"id": "76339:5011"}}

Keerthi Suresh:  கீர்த்தி சுரேஷ் அசரடிக்கும் போட்டோஸ்  

ரிவால்வர் ரீட்டா : கீர்த்தி சுரேஷ் அசரடிக்கும்  கிளாமர் போட்டோஸ்  

 

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படமே இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்தும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடித்தார். அதுவும் ஹிட் ஆனது.

இதையடுத்து வேகமாக முன்னணி நடிகை இடத்திற்கு முன்னேறினார். தொடர்ந்து விஜயுடன் பைரவா, சர்கார்,விக்ரமுடன் சாமி 2, விஷாலுடன் சண்டை கோழி 2 என மள மளவென படங்களில் நடித்து வந்தார். நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருதினியும் வென்றார்.

ஆனால் யார் கண் பட்டதோ சமீபகாலமாக அவரது படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. சாணி காகிதம், சைரன், ரகு தாத்தா என வரிசையாக தோல்வி அடைந்தன. ஹிந்தியில் இவர் நடித்த தெறி ரீமேக் படமான பேபி ஜான் அட்டர் பிளாப் ஆனது.

இந்த் நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்து ரிவால்வர் ரீட்டா படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் கே சந்துரு என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியிருக்கிறது.சமீபத்தி ல் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. டார்க் காமெடியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் நல்ல வவேற்பை பெற்றுள்ளது. இப்ப்ட்ம் கீர்த்தி சுரேஷுக்கு நிச்சயம் வெற்றியை பெற்றுதரும் என்றே தெரிகிறது.