Ravi: ஆர்த்தி ரவிக்காக களத்தில் இறங்கிய டாப் நாயகி… என்ன இவ்வளோ ஓபனா சண்டை போடுறாங்க…
RaviMohan: பிரபல நடிகர் ரவிமோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக ஐசரி கணேஷ் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டது தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பு கிளப்பி இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆர்த்திரவி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி ஒருவரிடம் கடந்துவிட்ட நிலையில் இருதரப்பும் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஐசரி கணேஷ் வீட்டில் நடந்த திருமண விழாவில் பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி ஒரே நிற ஆடையில் தம்பதியாக வந்தார்.
இது சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்த மனைவி ஆர்த்தி வெளிப்படையாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். என்னுடன் வாழ்ந்தவர் செய்த துரோகத்தால் தற்போது நாங்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. என்னுடைய மகன்களின் அழுகையை ஒரு தாயாக நான் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கிறேன்.
மகன்களின் அமைதியை கருத்தில் கொண்டே இதுவரை அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். நான் காசு பிடுங்குவர் என அவர் ஓப்பனாகவே என் மீது குற்றச்சாட்டுகளை வைத்தபோதும் நான் அமைதியாக இருந்ததற்கு மகன்கள் தான் காரணம்.
என்னுடைய மகன்களுக்காக நான் இன்னும் தைரியமாக இருக்கிறேன். எங்களுடைய விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது. என்னை அவரின் முன்னாள் மனைவி எனக் குறிப்பிட வேண்டாம். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுமை காக்க வேண்டிக்கொள்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ஆர்த்திரவியின் அறிக்கைக்கு நடிகைகள் குஷ்பூ சுந்தர் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் வெளிப்படையாக ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குஷ்பூ, ஆர்த்தியின் மற்றும் அவர் அம்மாவின் நெருங்கிய தோழி என்பதால் தன்னுடைய ஆதங்கத்தை இந்த விஷயத்தில் பேசி இருக்கிறார்.
ரவியை ஆர்த்தி காதலித்தபோது இருவருக்கும் ஆதரவாக இருந்து திருமணம் செய்து வைத்ததும் நடிகர் குஷ்புதான் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்த்தி ரவியின் அறிக்கையை குறித்த பதிவை தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார்.
அதற்கு வந்து ரசிகர் ஒருவர் இதெல்லாம் ஆர்த்தியின் அம்மாவால்தான் நடந்ததாக கமெண்ட் செய்ய அதில் கடுப்பான குஷ்பூ, உங்களுக்கு அவங்க அம்மாவை தெரியுமா?
அவங்க எப்படிப்பட்ட மனுஷின்னு உங்களுக்கு தெரியுமா? உங்க அம்மா பண்ண வேளை உங்களை எப்படி ஒரு சுய புத்தி இல்லாமே ஆகிடுச்சு என்று நான் சொன்னால் உங்களால் ஒப்புக்கொள்ள முடியுமா என காட்டமாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.
பொதுவாக பிரபலங்களின் விவாகரத்து வழக்கில் மற்ற பிரபலங்க இதுவரை தலையிடாத நிலையில் முதல்முறையாக இப்படி குஷ்பூ மற்றும் ராதிகா இருவரும் நேரடியாக களத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.