திரிஷாவை திணற திணற கேள்வி கேட்ட கேஎஸ்ஆர்... இதெல்லாம் ஓவரா இல்ல...!

யூடியூப் சேனல் ஒன்றில் கமல், திரிஷா, சிம்பு, ஏஆர்.ரகுமான் என தக் லைஃப் குழுவினருடன் இயக்குனர் கேஎஸ்.ரவிகுமார் கலந்துரையாடினார். அப்போது நடிகை திரிஷாவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதையும் எப்படியோ சமாளிச்சிடுறாங்க. என்னன்னு பாருங்க.
'நீங்க இன்னும் எத்தனை வருஷமா ஹீரோயினாவே இருப்பேன். அப்படிங்கற எண்ணம் இருக்கு?'ன்னு கேஎஸ்.ரவிகுமார் திரிஷாவிடம் கேட்கிறார். அதற்கு திரிஷா சொன்ன பதில் இதுதான். இதுக்கு சத்தியமா பதில் இல்லை சார். 5 வருஷத்துக்கு முன்னாடி கேட்டா நான் சொல்லிருப்பேன். இப்ப தெரியாது.
ஆனாலும் போய்க்கிட்டு இருக்கு. என்று பதில் அளித்தார். அப்போது இன்னும் 5 வருஷம் வேணாலும் போகும். நான் என்ன சொல்றேன்னா கதையின் கருவுக்குப் பொருந்துற மாதிரி முக்கியமான கேரக்டர்னு கேட்டார். அப்போது கமல் குறுக்கிட்டு நான் சொல்லட்டுமான்னு பேச ஆரம்பிக்கிறார்.
கதையின் மையத்துக்கு வந்து 20ல இருந்து 25 வயசுக்குள்ள தான் ஹீரோயின் இருக்கணும்னு யாரு சட்டம் போட்டது? அவ்வையாருக்கு எல்லாம் வயசே தேவையில்லை. அதிக சம்பளம் வாங்கிய நடிகையும் அவர்தான் என்றார்.
அப்போது எம்.ஆர்.ராதா பிசியாக இருந்தாராம். அந்த அவ்வையார் நடிகையை விட ஒரு ரூபா அதிகமாக சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன்னு சொன்னாராம் என கேஎஸ்ஆர். ஒரு தகவலை சொன்னார்.
இனி தமிழ்சினிமா அப்படி கேரக்டருக்கு ஏற்ப மாறும்னு நம்பிக்கை இருக்குன்னு கமல் சொன்னார். எனக்கு காந்திமதி, எஸ்.என்.லட்சுமி அம்மா இவங்க கூட எல்லாம் டூயட் பாடல. ஆனா என்ன ஒரு ஆக்டிங். கோவை சரளா, ஊர்வசிக்கு எல்லாம் வயசு வித்தியாசம் இல்லை. நல்ல டேலன்ட். குண்டா இருக்கலாம். கிழவியா இருக்கலாம். ஒல்லியா இருக்கலாம். கேரக்டர் தான் ஆடியன்ஸைப் போய்ச் சேரும். நமக்குத் தான் கதை பண்ணத் தெரியலையோங்கற சந்தேகம் அப்பப்ப வரும் என்கிறார் கமல்.
அவ்வையாராக நடித்த நடிகை கே.பி.சுந்தராம்பாள். கமல் கோவை சரளாவுடன் ஜோடியாக நடித்த படம் சதிலீலாவதி. இப்போது தக் லைஃப் படத்திற்கான புரொமோஷன் பல சேனல்களில் நடந்து கொண்டு உள்ளது. அதில் ஒன்றுதான் இது. படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது.