தசாவதாரம் இயக்குநர்!.. லிங்காவால் அடிவாங்கிய பெயர்.. கே.எஸ். ரவிகுமார் பிறந்தநாள் இன்று!..

by SARANYA |
தசாவதாரம் இயக்குநர்!.. லிங்காவால் அடிவாங்கிய பெயர்.. கே.எஸ். ரவிகுமார் பிறந்தநாள் இன்று!..
X

தமிழ் சினிமாவில் "கமர்ஷியல் கிங்" என்று அழைக்கப்படும் பிரபலமான இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகரான கே.எஸ்.ரவிகுமார் இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பல பிரபலங்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாரதிராஜா, விக்ரமன், ராமராஜன், நாகேஷ் ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்தார். மேலும், விக்ரமன் இயக்கிய "புது வசந்தம்" படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்தார். இப்படத்தின் வெற்றி அவருக்கு முதல் படத்தை இயக்குவதற்காக வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. அதையடுத்து ’புரியாத புதிர்’ என்ற கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.


முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, தெனாலி, வில்லன், தசவதாரம் என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், அஜித் குமார், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார். இவரது படங்கள் நகைச்சுவை, த்ரில்லர், ஆக்‌ஷன் போன்ற பல உணர்வுகளையும் கொண்ட படமாக எடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துவிடும்.

சிறிய பட்ஜெட் படங்களை 20 நாட்களிலும், பெரிய பட்ஜெட் படங்களை 80 நாட்களிலும் முடித்து வேகமாக படமாக்கும் திறமைக்கொண்டவர் என புகழ் பெற்றுள்ளார். தான் இயக்கும் படங்களில் பெரும்பாலும் சிறு வேடங்களில் தோன்றுவது இவரது வழக்கமாகும். மேலும், இயக்குவதை குறைத்துக்கொண்ட கே.எஸ்.ரவிகுமார் கூகுள் குட்டப்பா , டிராகன் போன்ற பல படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் பல பிரபலங்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தக் லைஃப் புரமோஷனின் போது கமல், சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோரிடம் செம சூப்பரான கேள்விகளை கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story