மாசம் ஒரு படத்தை ரிலீஸ் பண்ணுவோம்ல!.. குபேரா படத்தின் ரிலீஸ் தேதி.. லாக் பண்ணியாச்சு..!
நடிகர் தனுஷ்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பேக் டு பேக் படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக சுற்றி வருகின்றார் நடிகர் தனுஷ். அதிலும் ராயன் திரைப்படத்திற்கு பிறகு ஏகப்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நிற்க கூட நேரமில்லாமல் சுற்றி வருகின்றார் நடிகர் தனுஷ்.
இயக்குனர் அவதாரம்: கடந்த 2016 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்கின்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கடைசியாக தனது 50வது படமான ராயன் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்றது.
இதனால் தொடர்ந்து புதிய திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றார். இது ஒரு பக்கம் தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள், மற்றொரு பக்கம் மற்ற இயக்குனர்களின் படங்கள் என்று பிசியாக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ். அந்த வகையில் ராயன் திரைப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார்.
இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இப்படத்தை முடித்த கையோடு இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் 90% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சில காட்சிகள் மட்டும் படமாக வேண்டி இருப்பதாக கூறப்படுகின்றது.
குபேரா படம்: தெலுங்கில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்ற வருகின்றன. இப்படத்தில் நடிகர் தனுஷ் இதுவரை செய்திறாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கின்றார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த திரைப்படம் ஒரு பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்னுடைய என்மேல் கோபம் பிப்ரவரி மாதமும், இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதியும் வெளியாக இருக்கின்றது. அடுத்ததாக குபேரா திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக கூறி வருகிறார்கள். நடிகர் தனுஷுக்கு இந்த வருடம் மிகச் சிறந்த வருடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.