எங்களுக்கெல்லாம் கொடுக்கல... எதுக்கு அந்த பட்டம்? லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி குஷ்பூ பேட்டி

சமீபத்தில் நடிகை நயன்தாரா தனக்கு இருந்த லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வேண்டாம் என்று ஒரு அறிக்கை மூலமாக வெளியிட்டு இருந்தார். இனிமேல் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். நயன்தாரா என்று அழைத்தால் போதும். இதுவரை எனக்கு கொடுத்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஒரு அறிவிப்பை பற்றி நடிகை குஷ்புவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவருடைய கருத்தை தெரிவித்திருந்தார் குஷ்பூ. அதாவது ஒரு நடிகைக்கு பட்டம் கொடுப்பதே பெருசு. ஆனால் அந்த பட்டம் தனக்கு வேண்டாம் என நயன்தாரா கூறியது பற்றி உங்கள் கருத்து என்ன என குஷ்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு இது நல்ல விஷயம்தான். பெயர் என்பது எதற்கு .அவர்களை அந்த பெயரை வைத்து கூப்பிடத்தான்.
அப்படி இருக்கும் பொழுது பட்டம் எதுக்கு? வேண்டாமே .எங்கள் காலத்தில் அப்படி எல்லாம் பட்டம் கொடுத்து நான் பார்த்ததே இல்லை. பட்டம் என்றால் அது ஒருவருக்கு மட்டும் தான். அது நம்முடைய ரஜினிகாந்த் அவருக்கு மட்டும் தான். தமிழ்நாட்டு அளவில் ஏன் இந்திய அளவில் இல்லை உலக அளவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். அதனால் பெயர் சொல்லி கூப்பிட்டாலே போதும். நயன்தாரா செய்தது நல்ல விஷயம் என குஷ்பூ கூறியிருந்தார்.
உடனே பத்திரிகையாளர் ஒருவர் உங்களுக்கு கோயில் எல்லாம் கட்டினார்களே என குறிப்பிட்டு இந்த கேள்வியை கேட்டார். அதற்கும் குஷ்பூ நிச்சயமாக. ஆனால் எனக்கு பட்டம் கொடுக்கவில்லை .கோயில் கட்டியதற்கு நான் இன்று வரை கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறி மழுப்பினார். இன்று நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பூஜை பிரசாத் ஸ்டூடியோவில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த படத்தை சுந்தர் சி இயக்கப் போகிறார். ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். நயன்தாராவுடன் இணைந்து இந்த படத்தில் ரெஜினா ,அபிநயா, யோகி பாபு எனது பல முக்கிய பிரபலங்களும் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்திற்காக நயன்தாரா கிட்டத்தட்ட ஒரு மாதம் விரதம் இருந்து வருகிறாராம். அவர் மட்டும் இல்லை அவரின் குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பமே இந்த படத்திற்காக விரதம் இருந்து வருவதாக ஐசரி கணேஷ் இன்று நடந்த அந்த பூஜை விழாவில் கூறியிருந்தார் .
மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தை போலவே இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். இந்திய அளவில் இந்த படம் முக்கியமான படமாக இருக்கும் என சுந்தர் சி யும் அவருடைய கருத்தை கூறியிருந்தார்.