எல்சியூவில் எண்ட்ரி கொடுக்கும் சமந்தா… கேரக்டர் இதுதானா? அட தெறி மாஸா இருக்குமே!

LCU: ட்ரெண்டிங் இயக்குனராக தற்போது இருக்கும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எல்சியூவில் இருந்த இன்னொரு கேரக்டரை வெப்சீரிஸாக தயாரிக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்கள் தான் சீரிஸ் அடிப்படையில் படம் வெளியாகும். அதிலும் பிரபலமான அவெஞ்சர்ஸ் படத்தில் இருக்கும் எல்லா கேரக்டருக்குமே தனியாக படங்கள் இருப்பது அந்த வகை படங்களுக்கு மேலும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு அவருடைய கனவு நாயகனான கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இந்த படத்தின் வெளியீட்டிற்கு முதல் நாள் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் கைதி படத்தை பார்த்துவிட்டு வரவேண்டும் என ஒரு அறிக்கை வெளியிட்ட ஆச்சரியப்படுத்தினார். படத்திலும் கைதி மற்றும் விக்ரமை இணைக்கும் சில காட்சிகளையும் வைத்திருந்தார்.

இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் எல்லா படங்களும் எல்சியூவாக இருக்க வேண்டும் என பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்தனர். அந்த வகையில் விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ திரைப்படத்தை எல்சியூவாகவே அவர் உருவாக்கி இருந்தார்.
கைதி படத்தின் போலீஸ் ஆபீஸர் ஆன நெப்போலியன், கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கமல்ஹாசனின் குரல், இடையில் வரும் கைதி பட டெல்லியின் குரல் என ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காமல் எல்சியூவாக காட்டி இருந்தார்.
அதைத்தொடர்ந்து எல்சியூவில் ரசிகர்களே பலவற்றை யூகித்து அது குறித்து கருத்து பதிவிட்டு வந்தனர். தற்போது ரஜினியின் கூலி படத்தை முடித்துவிட்டு கைதி இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். அது டெல்லி விடுதலை ஆனதற்கு பின்னர் இருக்கும் கதையாக அமைக்கப்பட உள்ளதாம்.
அது மட்டுமில்லாமல் எல்சியூவின் இன்னொரு படமாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் பென்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நிவின் பாலி நடித்தார். இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆச்சரிய எண்ட்ரியாக கிளைமாக்ஸில் கலக்கியது ஏஜெண்ட் டீனா கேரக்டர்.
தற்போது அந்த கேரக்டரை இன்னொரு இயக்குனரை வைத்து வெப் சீரிஸ் ஆக இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார். சமீபத்தில் எல்சியூவில் நடிகை சமந்தா இணைய இருப்பதாக கசிந்தது. இதனால் அவர் டீனாவாக நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.